கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது. தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தது மக்களிடையே ஆறுதலாக இருந்துவந்தது. இந்த நிலையில், கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல்Continue Reading

உதகை அருகே பிளஸ்-2 கணித தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக எழுந்த புகாரில் கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத நீலகிரி மாவட்டத்தில் 41 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.Continue Reading

கோவையை சேர்ந்த பதினான்கு வயது பள்ளி மாணவன், பிரபல சமூக வலைதள பக்கங்களை போல புதிய செயலிகளை உருவாக்கி கணிணி துறையில் இளம் தொழில் முனைவோராக உருவாகி புதிய சாதனை படைத்துள்ளார். கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்,ராஜேஷ்வரி ஆகிய தம்பதியரின் மகன் பரத் கார்த்திக். பத்தாம் வகுப்பு பயின்று வரும் பரத் தனது சிறு வயது முதலே கணிணி தொடர்பான துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.Continue Reading

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தின் 13-ஆம் நாள் நிறைவு விழாவாக யானை வாகனத்தின் மீது எழுந்தருளி உலாவந்த ஏகாம்பரநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான உலக பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி‌ உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவமானது கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஏகாம்பரநாதர்,ஏலவார்குழலியோடு அனுதினமும் காலை,இரவு நேரங்களிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிContinue Reading

உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் அதிகாலை நேரத்தில் கரடி உலாவந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் உலாவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள்ளும், வனப்பகுதிக்குள்ளும் செல்லும் வனவிலங்குகள், இரவு நேரங்களில் உணவு, குடிநீர்Continue Reading

சென்னை தரமற்ற செருப்பை விற்பனை செய்த கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் இராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடசென்னை காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஏகே மணி(வயது53). இவர் கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று ராயபுரத்தில் அமைந்துள்ள ஜம்ஜம் செருப்பு கடையில் ஒருஜோடி செருப்பை ஒன்றை தனக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த செருப்பை கடந்த 5 நாட்களுக்கு முன்னராகதான் பயன்படுத்தியுள்ளார். அந்த செருப்பை அணிந்தContinue Reading

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பல வகையான கருத்துகளை வெளியிட்டதால் அண்மைக்காலமாக இரு தரப்பினரிடையே பிரச்சனை இருந்துவருகிறது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பேசி முடிவு செய்ய வேண்டியContinue Reading

சென்னையில் வரும் 16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், செயற்குழு கூட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16-ம் ஞாயிற்றுக்கிழமை பகல்Continue Reading

கோவை- சென்னை இடையேயான இயக்கப்பவுள்ள அதிகவேக வந்தே பாரத் ரயில் சேவைக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் முதல் அதிவேக ரயிலான வந்தேபாரத் ரயிலின் சேவையை நாளை (ஏப்.8) பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இதனிடையே, சென்னை-கோவை இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலானது கோவை- சென்னை இடையே புதன்கிழமைContinue Reading

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரர்.3-ம் தேதிவரை நடைபெற்றுமுடிந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் நேற்றுடன் (ஏப்ரல்.5) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழிப்பாடத்Continue Reading