தென்காசியிலிருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமளவங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், புளியரை சோதனை சாவடியில் சிறப்பு தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இருப்பினும், விதிகளை மீறி சட்டவிரோதமாக, ஏராளமான லாரிகளில் தென்காசி மாவட்டத்திலிருந்துContinue Reading

பங்குனி உத்திரத்தையொட்டி, கோவையில் உள்ள புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அந்த வகையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகைContinue Reading

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கொண்டாடப்பட்டது. அதில், கோவையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவரும் இளம் எழுத்தாளருமான ரித்விக் பாலா உள்ளிட்ட 11 பேருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக ஆளுநரின் பிறந்தநாள் விழாவையொட்டி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இளம் சாதனையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஸ்காட்டிஷ் பைரேட்ஸ் அண்ட் தி டெட்லி டிராகன்’ புத்தகத்தின்Continue Reading

ராயபுரம் பகுதியில் குடிபோதையில் ட்ரிபிள்ஸ் சென்ற இளைஞர்கள் மூவரும் போலீசாரை பார்த்தவுடன் தப்பிக்க முயன்ற நிலையில், போக்குவரத்து போலீசார் அவர்களை துரத்தி பிடித்து அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரம் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து கொண்டிருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு பைக்கில் வந்த 3 இளைஞர்கள் போக்குவரத்து போலீசாரை கண்டவுடன் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்வதுContinue Reading

தமிழகம் – ஆந்திரா எல்லையில் எலாவூர் சோதனை சாவடியில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் நடத்திய வாகன சோதனையில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எலாவூர் சோதனைச் சாவடியில் போதை தடுப்பு போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து ஒன்றை சோதனையிட்ட போது, சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தContinue Reading

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 15-ம் தேதி ஈரோடு வரவுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெரியசேமூரில் நடைபெற்ற தொண்டர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.முத்துச்சாமி பேசினார். அதில், எல்.பி.பி கால்வாய் நவீனமயமாக்கல் பணியை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, திட்டத்தை எதிர்க்கும் மற்றும் ஆதரிக்கும் விவசாயிகள் குழுக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இந்த திட்டத்திற்குContinue Reading

இந்தியாவில் வாய்மொழி அவதூறு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த மோடி அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம் தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும்Continue Reading

கோவையில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி அரங்கில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, ஆட்டிசம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட ஆட்டிசம் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகள்Continue Reading

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து சுற்றுலா பேருந்தில் 51 பேர் வேளாங்கண்ணி குருத்தோலை விழாவில் பங்கேற்க சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்றபோது, சாலையின் வளைவில் உள்ள பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதிய பேருந்து கவிழ்ந்துContinue Reading

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி கூட்டContinue Reading