தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருந்துவரும் டி.சி.எஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் முடிவடைந்த நிதியாண்டின் (FY23) நான்காம் காலாண்டில் 11,391 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.10,846 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.9,926 கோடியாக இருந்தபோது நிகர லாபம் 14.8 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச்Continue Reading

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, பாட்டில்கள் திரும்ப பெறப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்த நிலையில், ஒரு வாரத்தில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பாட்டில்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களிலும்,Continue Reading

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான மறைமுக ஏலத்தில் ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 550 ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது. திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 785 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதனிடையே,Continue Reading

தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொதுமக்கள் பயணத்திற்கு என்று பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் கிராம மற்றும் நகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அமையவுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசியContinue Reading

கோவை விமான நிலையத்தில் விமானம் மூலம் சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் மற்ற விமான நிலையங்களைவிட அதிகமாக இருப்பதால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு நாள்தோறும் விமான சேவை வழங்கப்பட்டுவருகிறது. தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம், மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்கிறது. தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில், சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவேContinue Reading

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மணப்பாறை முறுக்கு, ஊட்டி வரிக்கி, நெகமம் காட்டன் சேலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புவிசார் குறியீடு சட்டம் 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை, இந்தியாவில் 435 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில்Continue Reading

நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் நகைகளுக்கு கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவில் பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத்தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என நகைக்கடைகளுக்கு மத்திய அரசுContinue Reading