லக்னோ, ஜூன் 18.. உத்தரபிரதேசத்தின் பலியா மாவட்ட மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறப்புக்கு கடுமையான வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடும் வெயிலின் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உ.பி.யில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேலே வெப்பநிலை காணப்படுகிறது. காய்ச்சல்,Continue Reading

ஜூன்.5 தமிழகத்தில் கோவை, நீலகிரி,சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 5) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ளContinue Reading

ஜூன்.3 தமிழகத்தில் இன்றும் (ஜூன்.3) நாளையும் வெப்பநிலை 106 டிகிரி வரை இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் இது தொடர்பாக செய்திக்குறிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மேற்கு திசைக் காற்று வீசுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் இன்று முதல் 4 நாட்களுக்கு (ஜூன் 3, 4, 5, 6) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இடி,Continue Reading

ஜூன்.2 தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும்Continue Reading

ஜூன்.1 தமிழகப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும்(ஜூன்.1), நாளை(ஜூன்.2)யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.Continue Reading

மே.31 தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அக்னிநட்சத்திரத்தால் கடுமையான வெயில் வாட்டியெடுத்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்திய நிலையில், அவ்வப்போது பல இடங்களில் மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தContinue Reading

மே.29 தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலிலிருந்து விடுதலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதற்கு முன்பாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் அதன் உக்கிரம் மேலும் அதிகரித்தது. இருப்பினும், தமிழகத்தின்Continue Reading

மே.27 தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சியால் பல மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இதன்மூலம் கோடைகாலத்தில் பெய்யவேண்டிய இயல்பானContinue Reading

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான்நிகோபார் தீவுகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துவந்தது. வீசிய அனல் காற்றால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டெல்லிContinue Reading

மே.24 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சூறாவளிக் காற்று வீசும் என்பதால் நாளை முதல் 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தமிழக-ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 27ஆம்Continue Reading