டிசம்பர்-31. கேரளாவைச் சேர்ந்த நிமிஷப் பிரியா என்ற செவிலியருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. பாலக்காட்டைச் சேர்ந்த பிரியா கடந்த, 2011- ஆம் ஆண்டு ஏமன் நாட்டித் தலைநகரமான சானவுக்குச் சென்று அங்கு மருத்துவமனையில் செவிலியராக வேலைக்கு சேர்ந்தவர் ஆவார். அதன் பிறகு கடந்த 2014- ஆம் ஆண்டில் பாலக்காட்டுக்கு நிமிஷாவும் அவருடைய கணவர் மற்றும் மகளும் திரும்பினார்கள். சில மாதங்கள்Continue Reading

டிசம்பர்-31. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்திய விஞ்ஞானிகளால் இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு பின்னர் நிலை நிறுத்தப்பட்டது இந்திய வான்வெளி சோதனையில் மிக முக்கிய சாதனையாக கருதுப்படுகிறது. திங்களன்று இரவு பி.எஸ்.எல்.வி.சி. 60 என்ற ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ்-பி, ஸ்பேடெக்ஸ் -ஏ என்ற இந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டன. தரையில் இருந்து ஏவப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக் கோளும் 15Continue Reading

டிசம்பர்-29. இந்தியாவின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்மப்புத்திரா மீது உலகத்தின் மிக்பெரிய அணையை சீனா கட்ட இருப்பது நாட்டின் வடகிழக்கு மாநில மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. சீனா நாட்டின் திபெத் பீட பூமியில் கயிலாய மலையில் புறப்படும் இந்த ஆற்றுக்கு அங்கு ஸாங்- பே என்று பெயா். அருணாசலப் பிரேதசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த உடன் இதற்கு பெயர் பிரம்மபுத்திரா. அங்கிருந்து அசாம் மாநிலம் வழியாகContinue Reading

டிசம்பர்-23, பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்கு பின் மறுதேர்வு நடத்தப்படும். இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த வகுப்புக்கு அனுப்பக் கூடாது என்ற மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. *Continue Reading

டிசம்பர்-20. ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளதை அடுத்து அவர், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்ட போது கலைContinue Reading

டிசம்பர்-18. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் 537 விக்கெட்களை டெஸ்டிலும், 156 விக்கெட்களை ஒருநாள் போட்டியிலும், 72 விக்கெட்களை டி 20 போட்டிகளில் வீழ்த்தி உள்ளார். சென்னையை சேர்ந்த அஸ்வின் கடந்த 1986-ஆம் ஆண்டில் பிறந்தவர்.அவருக்கு வயது 38 ஆகும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள அஸ்வின் இந்தியன்Continue Reading

டிசம்பர்-18, பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்; ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 5ஆவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவை நோக்கி நகர்கிறது.Continue Reading

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை பிரபல பாடி பில்டர் ஜோ லிண்டரி்ன் திடீர் மரணம் நிரூபித்து உள்ளது. உடலை கட்டுக் கோப்பாக, முறுக்காக வைத்துக் கொள்வதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் உட்கொண்டதால் முப்பது வயதில் மரணம் அவரை தழுவிய செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. ஜோ லிண்டன் முப்பதே வயதில் ரத்த நாளம் வெடித்து இறந்துவிட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  அவர் கட்டுடலை விதவிதமாக வீடியோContinue Reading

ஜூன் 28 2 இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 08 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் இந்திய அணி எப்படி விளையாடும்Continue Reading

ஜூன் – 27 1983ஆம் ஆண்டு என்பது இந்திய கிரிக்கெட்டில் மறக்க இயலாத ஆண்டாகும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை நமக்கு வரலாற்றைப் படைத்தது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அப்போது இரண்டு முறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பை கோப்பையை அள்ளிக்கொண்டு வந்தது. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. அவர்கள் ஒரு பெரிய ஹீரோக்களாக இந்தியாContinue Reading