மே.27 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நுழைவதற்கான 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்Continue Reading

மே.26 சென்னையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுக்கான முதல் தகுதிப்போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி, விதிகள் குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தில், தோனி உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 16வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்றுவருகின்றன. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான தகுதிச் சுற்றுப்Continue Reading

மே.24 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 16வது ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றிபெற்றது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின. ‘டாஸ்’Continue Reading

மே.23 சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை தொட்டுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர்Continue Reading

மே.22 கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் ஆந்திரா, தெலங்கானா, உ.பி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் குத்து வரிசை,Continue Reading

மே.21 சென்னை கோவளத்தைச் சேர்ந்த அலைச்சறுக்கு விளையாட்டு வீரர் இராஜசேகர் பச்சை என்ற இளைஞர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. 27 வயது இளைஞரான இவர், கடந்த 19ம் தேதி அதிகாலை சுமார் 5-30 மணியளவில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்திற்கு திரும்பிContinue Reading

மே.12 கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுவன் ராஜ முனீஸ்வர், 2 மணி நேரம் தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார். நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதி. இவர்களது 11 வயது மகன் ராஜமுனீஸ்வர். தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்துவருகிறார்.Continue Reading

மே.11 ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” படக்குழுவினரை சென்னையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வசித்து வரும் பொம்மன் – பெள்ளி தம்பதி, யானைகள் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற 2 குட்டி யானைகளை பராமரித்து தங்களின் குழந்தைகள் போல்Continue Reading

மே.6 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. இன்று மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் சொந்த மண்ணில் 2-வதுContinue Reading

மே.1 மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். நிதானமானContinue Reading