ஏப்ரல்.27 வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி செய்த மாற்றுத்திறனாளி நபர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு, தான் ஆசியகோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டியில்Continue Reading

பெண்காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி

ஏப்ரல்.23 கோவையில் பெண் காவலர்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பெண் காவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பவுன்டரிகள் மற்றும் சிக்சர்களை விளாசி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கோவை மாநகர தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற இந்தContinue Reading

இன்றைய ஐ.பி.எல் போட்டி

ஏப்ரல்.23 ஐ.பி.எல் போட்டியின் இன்றை ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. 16வது ஐ.பி.எல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றி , 4 தோல்விகளைப் பெற்றுள்ளது. சென்னை அணி இதுவரை 4Continue Reading

கோவையில் துப்பாக்கிசுடும் போட்டி

ஏப்ரல்.21 கோவை மேற்கு மண்டல காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு இடையயான துப்பாக்கிச் சுடும் போட்டி மதுக்கரை மலையடிவாரத்தில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழக காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததை (பொன்விழா ஆண்டு) கொண்டாடும் வகையில் கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக காவல்துறையில்Continue Reading

கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்த நெல்லை மாணவி

டாடா நிறுவனம் சார்பில் இந்திய அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் நெல்லை மாணவி ஹிஸானா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். குடியரத்தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் சிறப்பான இந்தியாவை உருவாக்குதல் என்ற தலைப்பில் இந்திய அளவில் கட்டுரை போட்டிகளை நடத்தியது. இந்தியா எல்லா வகையிலும் வளமான நாடாக மாற்றுவதற்கு இளம் தலைமுறையினரிடம் இருந்து இந்தக் கட்டுரைContinue Reading

வல்லநாட்டில் துப்பாக்கி சுடும்போட்டி

ஏப்ரல்.19 தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்த காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில், நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ்குமார், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததை பொன்விழாவாக கொண்டாடும் வகையில், தென் மண்டல காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கும், காவல் துறையில் உயர் அதிகாரிகளுக்கும் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ளContinue Reading

ஐபிஎல் - சென்னை பெங்களூரு அணிகள் மோதல்

ஏப்ரல்.17 ஐ.பி.எஸ் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஐ.பி.எல் இறுதிப் போட்டி அமகதாபாத்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரை, ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றியது.Continue Reading

விசில் போடு எக்ஸ்பிரஸ் பதிவு தொடக்கம்

சென்னையில் வரும் 30ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டியை இலவசமாகக் காண குமரி முதல் சென்னை வரை இயக்கப்படும் விசில்போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிContinue Reading

தாராபுரம் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர் பசுபதி, மாநில அளவில் சிறந்த மாணவராக தேர்வாகியுள்ளார். சென்னையில் அண்மையில் மாநில அளவிலான இலக்கிய மன்றப்போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி 8 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த போட்டிகளில், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பசுபதியும் பங்கேற்றார். அதில்,Continue Reading

தனி நபர் நடிப்புப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, துபாய் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த திருநங்கை மாணவி அஜிதாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வியைத் தாண்டி தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை நுண்கலை, விளையாட்டு, அறிவியல், இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நடப்பு 2022-23ம் கல்வியாண்டில், சிறந்துContinue Reading