ஏப்ரல்.22 தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு 720 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வரும் 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி,பொன்னிவாடி,எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 120 நபர்களிடம் நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு நல்லதங்காள் அணைContinue Reading

ஏப்ரல்.19 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுப் பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத அதிருப்தியில், செடிகளை அழிக்கும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது, இந்த பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, விளைவித்த தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்துContinue Reading

ஏப்ரல்.18 திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, கோடையில் வெயிலால் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் அதன் சுற்றுப்பகுதியிகளில் கோடை சீசனை கணக்கில்கொண்டு விவசாயிகள் ஆண்டுதோறும் தர்பூசணி சாகுபடி செய்துவருகின்றனர். கிணற்றுபாசனத்தை வைத்து விவசாயிகள் தர்பூசணியை பரவலாக சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் வீணாவதைத்தடுக்கும் வகையில், தர்பூசணிக்காக பார் எனப்படும் மேட்டுப்பாத்தி அமைத்து, நீர் ஆவியாகாமல் தடுக்க நிலப்போர்வை போர்த்திContinue Reading

நடப்பாண்டில் கோடை வெயில் முன்னதாகவே துவங்கி வாட்டி வரும் சூழலில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாமரங்களில் பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்து வருவதால் கடந்தாண்டை விட சாகுபடி குறையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், மா சாகுபடி அதிகளவு செய்யப்பட்டுள்ளது. மானுப்பட்டி, ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, தளி, பொன்னாலம்மன்சோலை, ராவணாபுரம் உட்பட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், மானாவாரியாகவும்,Continue Reading

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததைக் கண்டித்து நூதன போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய விவசாயிகள், விவசாயம் சார்ந்த உபதொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால், சமீபContinue Reading

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பீட்ரூட் கிழங்குகள் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த பீட்ரூட், தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் பீட்ரூட்டை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில்Continue Reading

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் சின்னவெங்காயம் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனதில் இரு சீசன்களில், சின்ன வெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில், சாகுபடி செய்யப்படுகிறது. பிற காய்கறி சாகுபடியை விட இந்த சாகுபடிக்கு, அதிக செலவாகிறது. அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்Continue Reading

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மனம் வைத்தால், 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சங்கம் (சிபாகா) சார்பில் ‘பசுமை தொண்டாமுத்துர்’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் நிறைவு விழா கோவையில் நடைபெற்றது. போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் நடைபெற்றContinue Reading