*மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கிறது…. மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறது தேர்தல் ஆணையம். *தேர்தல் பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….. தேர்தல் பத்திரத்தின் எண்கள் இல்லாததால் யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கினர் என்பது தெரியவில்லை என்பது புகார். *தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹6,060 கோடியை நன்கொடையாகContinue Reading

*பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு…மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்… *சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 3.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது…. திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. *பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள்Continue Reading

*குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி…. திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்… *நாடு முழுவதும் 2019 முதல் 2024 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணம் ஆக்கப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கித் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தகவல்.. மேலும் ஒரு கோடி ரூபாய்Continue Reading

*உச்சதீதிமன்றம் நேற்று விதித்த கெடுவுக்குப் பணிந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா… ஆவணங்களை வெளியிட ஜுன் மாதம் வரை அவகாசம் கேட்டிருந்த ஸ்டேட் வங்கி ஒரே நாளில் ஆணையத்திடம் தாக்கல் செய்ததால் அனைவரும் வியப்பு. *மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டில் நடைமுறை செய்யப் போவதில்லை என்று முதலமைச்சர்Continue Reading

*சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைப்பு… பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு. *குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்பு.. திருக்கோயிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது நிறுத்தப்படலாம் என்றும் தகவல். *தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஸ் டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம்Continue Reading

*நாடாளுமன்றத் தேர்தல் மாாச் 14 அல்லது 15 ஆம் தேதி அறிக்கப்படலாம் என்று தகவல் .. ஆறு அல்லது ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு. *தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தேர்தர் ஆணையர் அருன் கோயல் விலகி உள்ளது பற்றி மல்லிகாஜுன காா்கே விமர்னம் .. தேர்தல் கமிஷனா அல்லது ஓமிஷனா என்று கேள்வி. *மன்னார் வளைகுடாவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்Continue Reading

*நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள்….. சென்னையில் அறிவாலயத்தில் முக ஸ்டாலினுடன் கேசி வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தை முடிவில் ஒப்பந்தம் கையெழுத்து.. *திமுக கூட்டணியில் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு இப்போது தொகுதி இல்லை. .. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலின் போது ஒரு இடத்தை தருவதாக திமுக உறுதி… முக ஸ்டாலினுடன் கமல் ஹாசன் நடத்திய பேச்சில்Continue Reading

*நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி வேட்பாளர் … காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளுக்காக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது .. சசி தரூர் மீண்டும் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளர்.. *நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு … சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் நடத்திய சந்திப்பில் உடன்பாடு. *இரண்டு தொகுதிகளை கேட்ட மதிமுகவிற்குContinue Reading

*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு 600 பேர் விருப்ப மனு … காங்கிரஸ். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து நிர்வாகிகள் உடன் மு.க. ஸ்டாலின் இன்றும் ஆலோசனை. *ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும் என்று செல்வப் பெருந்தகை நம்பிக்கை…40 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறோம். அதனால் காத்திருந்து தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவுContinue Reading

*நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னையில் அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் தேமுதிக குழுவினர் பேச்சு வார்த்தை … விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் வடசென்னை தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன் வந்து உள்ளதாக தகவல். பாமகவுடன் கூட்டணி அமைப்பது தெளிவான பிறகு தேமுதிகுவுக்கான தொகுதிகள் அறிவி்க்கப்படலாம் என்றும் கருத்து. *பெங்களூரு ராமேஸ்வரம் உணவு விடுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த தகவல்களை தருபவர்களுக்கு 10 லட்சம்Continue Reading