சீனாவில் கோவிட் 19 தொற்று போன்று மீண்டும் ஒரு வைரஸ் ? காய்ச்சல் பரவுகிறதா?
நீங்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு110- வயது பண்ருட்டி பாட்டி சொல்லும் ரகசியம்.
விடாமுயற்சி ‘வழி விட்டதால் பொங்கலுக்கு குவியும் படங்கள் !
சம்பளத்தை குறைத்த ஷங்கர், ராம் சரண் !
சிறைக்கு செல்வாரா எஸ்.வி. சேகர் ? உச்ச நீதிமன்றம் காப்பாற்றுமா?
‘மிஸ் இந்தியா அமெரிக்கா’ அழகிக்கு பிடித்த சென்னை நகரம்.
இந்தி சினிமா உலகம் மீது அனுராக் கஷ்யப் கோபம். தென்னிந்திய சினிமாவுக்கு பாராட்டு.
தமிழகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்’ தொற்று அதிகரிப்பு.
2025 -ல் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நான்கு படங்கள் !
பெயரை மாற்றினார் எலான் மஸ்க். திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன?
மாணவி பலாத்கார வழக்கில் அதிமுக அடுத்தப் பாய்ச்சல்.
ரஜினி சொனன் புத்தாண்டு வாழ்த்து.. புரியாமல் தவிக்கும் ரசிகர்கள்.
பொங்கலுக்கு ரெண்டே ரெண்டு படங்கள் !
விவசாயிகள் தலைவர் 36- வது நாளாக உண்ணவிரதம்- உயிா் ஊசல் !
கேரளா நர்ஸ் நிமிஷ பிரியாவுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை, காப்பாற்றும் முயற்சி கை கொடுக்குமா?
இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமைப் படும் சாதனையால் என்ன நன்மை?
223 படங்கள் ‘பிளாப்’: ரூ.ஆயிரம் கோடி நஷ்டம்! நெருக்கடியில் தமிழ் சினிமா !
கேம் சேஞ்சர்’ பாடல்களுக்கான பட்ஜெட் மட்டும் ரூ. 75 கோடி !
சுட்டெரிக்கும் சூரியனை நெருங்கும் விண்கலம் .. நெடு நாள் கனவு நிறைவேறுகிறது.
மாணவியை ரயில் முன் தள்விட்டு கொன்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனை நிறைவேறும் நாள் ?
ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பு … இருவரும் பேசியது என்ன?
சீனாவில் கோவிட் 19 தொற்று போன்று மீண்டும் ஒரு வைரஸ் ? காய்ச்சல் பரவுகிறதா?
ஜனவரி-03. கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மனித மெட்டாப் நியூமோ வைரஸின் (HMPV) பரவலை சீனா எதிர்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்த நாட்டு செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன, சிலர் மருத்துவமனைகள் மற்றும் தகன மேடைகள் நிரம்பி வழிகின்றன என்று கூறுகின்றனர். இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல
நீங்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு110- வயது பண்ருட்டி பாட்டி சொல்லும் ரகசியம்.
ஐம்பது,அறுபது ஆண்டுகள் வாழ்வதே பெரும் பிரச்சினையாக இருக்கிற காலத்தில் பண்ருட்டி அருகே ராசம்பாள் என்ற பாட்டி 110-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி அசத்தி உள்ளார். இவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று பாட்டியிடம் கேட்டோம். அவர் சொல்லும் பதில்கள் வியக்க வைக்கின்றன.
விடாமுயற்சி ‘வழி விட்டதால் பொங்கலுக்கு குவியும் படங்கள் !
ஜனவரி-03, அஜித்தின் ‘விடாமுயற்சி’, ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ பாலாவின் ‘வணங்கான்’ ஆகிய மூன்று படங்கள் பொங்கலுக்கு வருவதாக இருந்தன.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும், இந்த படங்கள் ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால், நடுத்தர மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு தலை காட்ட தயங்கின. இந்த நிலையில், விடாமுயற்சி, பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து விட்டது. அந்த படத்தை திரையிட இருந்த பல நூறு தியேட்டர்கள் ‘காலி’யாக
சம்பளத்தை குறைத்த ஷங்கர், ராம் சரண் !
ஜனவரி-03. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக வரும் 10 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. தெலுங்கு சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநர்
சிறைக்கு செல்வாரா எஸ்.வி. சேகர் ? உச்ச நீதிமன்றம் காப்பாற்றுமா?
ஜனவரி-02, சமூக வலை தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சையான கருத்தை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம். உறுதி செய்து உள்ளது. எஸ்.வி. சேகர் முன்பு பாஜகவில் இருந்த போது தெரிவித்த கருத்த ஒன்றுக்காக அவரை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் அவதூறாக பேசினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை
‘மிஸ் இந்தியா அமெரிக்கா’ அழகிக்கு பிடித்த சென்னை நகரம்.
ஜனவரி-02. ‘சென்னை நான் பிறந்த நகரம் மட்டுமல்ல; அது என் அடையாளத்தின் ஒரு பகுதி என்று சொல்லி கெய்ட்லின் சாண்ட்ரா நீல் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறார். அவர் 19 வயதில் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தை வென்று அனவைரின் கவனத்தையும் பெற்றவர். சான்ட்ரீனா நீல் தமது பூர்வீகம் பற்றி பேசுகையில் “சென்னை நான் பிறந்த நகரம் மட்டுமல்ல; இது எனது அடையாளத்தின் அடிப்படை பகுதியாகும். இங்கு இருந்து என்னுடன்
இந்தி சினிமா உலகம் மீது அனுராக் கஷ்யப் கோபம். தென்னிந்திய சினிமாவுக்கு பாராட்டு.
ஜனவரி-02. ‘விசுவரூபம் ‘ படத்துக்கு பிரச்சினை வந்த சமயத்தில் ‘இந்தியாவை விட்டே வெளியேறப்போகிறேன்’ என விரக்தியில் சொன்னார், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன். அது போன்றதொரு மனநிலையில்,இருக்கிறார், அனுராக் கஷ்யப். இவர்கள் இருவருக்குமே சில ஒற்றுமைகள் உண்டு. கமல் போலவே அனுராக்கும் பன்முகத் திறமையாளர். நடிகர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் என பல அவதாரங்கள் எடுத்த அனுராக், தன்னை உருவாக்கிய இந்தி சினிமா மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார். இத்தனைக்கும் இந்தி
தமிழகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்’ தொற்று அதிகரிப்பு.
ஜனவரி-02. தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ்(Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் ஸ்கரப் டைபஸ் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் ‘ஸ்கரப் டைபஸ்’ நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது . தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய்
2025 -ல் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நான்கு படங்கள் !
ஜனவரி-02, 2025 -ஆ ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘ஜாக்பாட்’ ஆண்டு என சொல்லலாம். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நான்கு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் இந்த ஆண்டில். அடுத்தடுத்து வெளிவர உள்ளன. முதலாவதாக ரஜினியின் ‘கூலி’ படத்தை பார்க்கலாம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கோடம்பாக்கத்தின் மோஸ்ட் வாண்டட் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.அனிருத் இசை. நாகார்ஜுனா ,சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன்
பெயரை மாற்றினார் எலான் மஸ்க். திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன?
ஜனவரி-1. உலக மாக பணக்காரரான எலான் மஸ்க் அவருடைய பெயரை எக்ஸ் வலை தளத்தில் மாற்றி இருப்பது புத்தாண்டு நாளில் அனைவரையும் கவனிக்கச் செய்து உள்ளது. டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர், வான் வெளி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரர், எக்ஸ் (டுவிட்டர் )நிறுவனத்தின் அதிபதி என பல அடையாளங்களை கொண்ட எலான் மஸ்க் நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை தீவிரமாக
மாணவி பலாத்கார வழக்கில் அதிமுக அடுத்தப் பாய்ச்சல்.
ஜனவரி-1. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார வழக்கில் எதிர்க்கட்சியான அதிமுக அடுத்தக் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அந்தக் கட்சி சார்பில் அண்ணா பல்கலைக் கழக வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிக் கொணடிருக்கும் இந்த வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்தக்
ரஜினி சொனன் புத்தாண்டு வாழ்த்து.. புரியாமல் தவிக்கும் ரசிகர்கள்.
டிசம்பர்-01. ரஜினிகாந்த் படங்களில் ‘ஸ்டண்ட்’ காட்சிகளுக்கு நிகராக ‘பஞ்ச் டயலாக்’ தவிர்க்க முடியாத அம்சமாக உள்ளது. பல வசனங்கள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருக்கும். படத்தின் கதை களத்துக்கு சில பொருத்தமாக இருக்கும். ‘பாட் ஷா’படத்தில் கதை களத்துக்கு அவசியமான ஒரு வசனம் உண்டு, அது – ‘’நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்’ என்பது, அந்த ‘டயலாக்; வில்லன்
பொங்கலுக்கு ரெண்டே ரெண்டு படங்கள் !
ஜனவரி-1, முன்னொரு காலத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றால் , கொத்து கொத்தாக தமிழ்நாட்டில் சினிமாக்கள் ரிலீஸ் ஆகும்.அது –ஒரு கனாக்காலமாகி விட்டது. இப்போது ஒன்றிரண்டு படங்களே வெளியாகின்றன.அதுவும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே. இந்த பொங்கலுக்கு மூன்று படங்கள் வெளிவருவதாக இருந்தது. அஜித்தின் ‘விடாமுயற்சி’, பாலாவின் ‘வணங்கான்’ மற்றும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களே அவை. லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சியை மகிழ்
விவசாயிகள் தலைவர் 36- வது நாளாக உண்ணவிரதம்- உயிா் ஊசல் !
ஜனவரி-01. கடந்த 36 நாட்களால உண்ணாவிரதம் இருந்து வரும் தங்கள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலை மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கு அனுமதி அளிப்போம் என்று பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனை பஞ்சாப் மாநில அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார். பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள கானௌரியில் நவம்பர் 26
கேரளா நர்ஸ் நிமிஷ பிரியாவுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை, காப்பாற்றும் முயற்சி கை கொடுக்குமா?
டிசம்பர்-31. கேரளாவைச் சேர்ந்த நிமிஷப் பிரியா என்ற செவிலியருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. பாலக்காட்டைச் சேர்ந்த பிரியா கடந்த, 2011- ஆம் ஆண்டு ஏமன் நாட்டித் தலைநகரமான சானவுக்குச் சென்று அங்கு மருத்துவமனையில் செவிலியராக வேலைக்கு சேர்ந்தவர் ஆவார். அதன் பிறகு கடந்த 2014- ஆம் ஆண்டில் பாலக்காட்டுக்கு நிமிஷாவும் அவருடைய கணவர் மற்றும் மகளும் திரும்பினார்கள். சில மாதங்கள்
இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமைப் படும் சாதனையால் என்ன நன்மை?
டிசம்பர்-31. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்திய விஞ்ஞானிகளால் இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு பின்னர் நிலை நிறுத்தப்பட்டது இந்திய வான்வெளி சோதனையில் மிக முக்கிய சாதனையாக கருதுப்படுகிறது. திங்களன்று இரவு பி.எஸ்.எல்.வி.சி. 60 என்ற ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ்-பி, ஸ்பேடெக்ஸ் -ஏ என்ற இந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டன. தரையில் இருந்து ஏவப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக் கோளும் 15
223 படங்கள் ‘பிளாப்’: ரூ.ஆயிரம் கோடி நஷ்டம்! நெருக்கடியில் தமிழ் சினிமா !
டிசம்பர்-31, — தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். முதலிருவர் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்.மூன்றாமவர், அதனை நெருங்கி கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள்? ஏற்கனவே பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ஜெமினி, ஏவிஎம்,,விஜயா –வாஹினி, சத்யா மூவீஸ், போன்ற கம்பெனிகள் ,கடையை மூடி விட்டார்கள். வேறு பாதை தெரியாதததால், சினிமா தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள சொற்ப ஆட்களும், சீக்கிரமே மூட்டை ,
கேம் சேஞ்சர்’ பாடல்களுக்கான பட்ஜெட் மட்டும் ரூ. 75 கோடி !
டிசம்பர் -31, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. ராம் சரணுக்கு இரட்டை வேடம். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். பிரதான வில்லன்- எஸ்.ஜே.சூர்யா. இவர்கள் தவிர, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப்படத்தின் ‘டிரெய்லர்’ நாளை ( 1 -ஆம் தேதி ) வெளியிடப்படுகிறது.தமன்
சுட்டெரிக்கும் சூரியனை நெருங்கும் விண்கலம் .. நெடு நாள் கனவு நிறைவேறுகிறது.
டிசம்பர்-30. விஞ்ஞானிகளின் நெடு நாள் கனவுகளில் ஒன்றான சூரியனை நெருங்கிவிட வேண்டும் என்ற ஆசையை அமெரிக்காவின் விண் வெளி ஆய்வுக் கழகமான நாசா நிறைவேற்றி உள்ளது. பூமியில் இருந்த படி நிலா,செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு எல்லாம் விண்கலங்களை அனுப்பி சோதனை செய்த விஞ்ஞானிகளால் சூரியனுக்கு மட்டும் அனுப்ப முடியமால் இருந்த குறை அகன்று இருக்கிறது. இதற்கு முன்பு வரை சூரியனுக்கு ஏன் விண்கலத்தை அனுப்ப முடியவில்லை என்றால், அதன் மையத்தில்
மாணவியை ரயில் முன் தள்விட்டு கொன்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனை நிறைவேறும் நாள் ?
டிசம்பர்-30, சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. சென்னை நங்கநல்லுரைச் சேர்ந்த சத்யபிரிாய என்ற மாணவி கடந்த 2022- ஆம் ஆண்டு பரங்கிமலை நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்த போது சதீஷ் என்பவரால் பிடித்துத் தண்டவாளத்தில் தள்ளப்பட்டார். அப்போது வேகமாக வந்த ரயில்
ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பு … இருவரும் பேசியது என்ன?
டிசம்பர்-30, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திடீரென சென்ற நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய் அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் முறையிட்ட விஜய்,விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு சட்டம் – ஒழுங்கு தொடர்பாக மனு ஒன்றை அளித்து உள்ளார். இந்த சந்திப்பு சுமார் 30
ரூ.700 கோடி நஷ்டம் புலம்பும் மலையாள சினிமா உலகம்.
டிசம்பர்-30, சிக்கனமான பட்ஜெட்டில் தரமான சினிமாக்களை கொடுப்பதில் இந்தியாவில் முதன்மையாக விளங்குவது –மலையாள திரை உலகம். ஆனாலும்’மசாலா’ தயாரிக்கும் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களே கல்லா கட்டுகின்றன. மலையாள திரை உலகம் ,பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை. ‘இந்த ஆண்டும் அப்படித்தான் என்று புலம்புகின்றனர் கேரள சினிமா தயாரிப்பாளர்கள். 2024 ஆம் ஆண்டு மலையாள திரையுலகம் நல்ல படங்கள் கொடுத்தது . ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆவேஷம்’, ‘பிரேமலு’, ‘வாழ’ என
ரூ 200 கோடி மதிப்புள்ள பணம் திருட்டு… திருப்பதி கோயில் நிர்வாகி திடுக்கிடும் தகவல்.
டிசம்பர்-29. திருப்பதி பெருமாள் கோயில் உண்டிலை எண்ணும் போது ரூ 200 கோடி மதிப்புள்ள பணம் திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சச்சையை ஏற்படுத்தி உள்ளது. உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் பெரிய ஜீயர் மடத்தின் பிரதிநிதியாக பங்ககேற்ற ரவிக்குமார் பல ஆண்டுகளாக ரூ 200 கோடி மதிப்புள்ள பணத்தை திருடியதாகவும் கடந்த 2023-ஆம் ஆண்டில் கையும் களவுமாகவும் பிடிபட்டார் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி
இந்த ஆண்டில் வசூலை அள்ளிய படங்கள்
டிசம்பர்-29. இந்தியாவில் இந்த 2024- ஆம் ஆண்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பர் ஒன் –புஷ்பா -2. அல்லு அர்ஜுன் –ராஷ்மிகா நடித்து வெளியான தெலுங்குப்படம். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்து திரையிட்டனர்.சுகுமார் இயக்கி இருந்தார். இதுவரை இந்த படம் ஆயிரத்து 705 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பிரபாஸ் நடித்து பான் இந்தியா படமாக வெளியான ‘கல்கி 2898 ஏடி’ரூ.
பிரம்மப்புத்திரா மீது சீனா கட்டும் அணையால் இந்தியாவுக்கு எற்படும் ஆபத்துகள்.
டிசம்பர்-29. இந்தியாவின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்மப்புத்திரா மீது உலகத்தின் மிக்பெரிய அணையை சீனா கட்ட இருப்பது நாட்டின் வடகிழக்கு மாநில மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. சீனா நாட்டின் திபெத் பீட பூமியில் கயிலாய மலையில் புறப்படும் இந்த ஆற்றுக்கு அங்கு ஸாங்- பே என்று பெயா். அருணாசலப் பிரேதசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த உடன் இதற்கு பெயர் பிரம்மபுத்திரா. அங்கிருந்து அசாம் மாநிலம் வழியாக
அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ 25 லட்சம் வழங்க உத்தரவு.
டிசம்பர்-28, அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். வழக்கறிஞர்கள் இருவர் தாக்கல் செய்த பொது நல மனுக்களை இரண்டாவது நாளாக விசாரித்த நீதிபதிகள் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தனர். உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது… அண்ணா பல்கலைக் கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை
சறுக்கிய ஜான்: சோகத்தில் அட்லீ
டிசம்பர்-28. ‘இளையதளபதி’விஜய்க்கு தொடர்ச்சியாக 3 மெகாஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லீ. பாலிவுட்டுக்கும் ஒரு நடை போனார்.ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் பெரும் வெற்றி பெற்றது. இந்தியில் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. தமிழில் வசூல் குவித்த தனது ‘தெறி’ படத்தை ‘பேபி ஜான்’ எனும் பெயரில் ரீ-மேக் செய்தார். அவர் இயக்கவில்லை. காளீஸ் என்பவர் டைரக்டு செய்தார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட
மன்மோகன் பிறந்த பாகிஸ்தான் கிராமத்து மக்கள் நெகிழ்ச்சி.
டிசம்பர்-29, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்காக பாகிஸ்தானில் உள்ள அவருடைய சொந்த ஊரில் அஞ்சலி செலுத்தி அவருடைய பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்து உள்ளனர். காஹ் கிராமத்தைச் சேர்ந்த அல்தாஃப் ஹுசைன் “ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இன்று எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம், ”என்று கூறினார். உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்தில் பிறந்து இந்திய பிரதமா் என்ற உயரிய இடத்தை
மாணவி விவரத்தை கசியவிட்டது யார் ? சென்னை போலீசுக்கு நீதிபதிகள் கேள்வி.
டிசம்பர்-27. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.இது தொடர்பாக நாளை விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாணைக்கு
கேம் சேஞ்சர் ‘: ஷங்கரைக் காப்பாற்றுமா? கைவிடுமா?
டிசம்பர்-27. ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களுடன் பயணித்தவர் ஷங்கர், சந்தை மதிப்பில்லாத அர்ஜுனை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தார். ‘இந்தியன் -2 ‘படத்தின் படுதோல்வியால்,அவர் துவண்டு போயிருக்கிறார். ஜெண்டில் மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன் என தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்த அவர் , முதன் முதலாக ‘பாய்ஸ்’ படத்தில் சறுக்கினார். புதுமுகங்களை வைத்து அவர் இயக்கிய அந்தப்படம், வசூலில் பெரிதாக குறை
உலகம்
சீனாவில் கோவிட் 19 தொற்று போன்று மீண்டும் ஒரு வைரஸ் ? காய்ச்சல் பரவுகிறதா?
ஜனவரி-03. கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மனித மெட்டாப் நியூமோ வைரஸின் (HMPV) பரவலை சீனா எதிர்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வைரஸ் வேகமாக பரவி
வணிகம்
கேரளா நர்ஸ் நிமிஷ பிரியாவுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை, காப்பாற்றும் முயற்சி கை கொடுக்குமா?
டிசம்பர்-31. கேரளாவைச் சேர்ந்த நிமிஷப் பிரியா என்ற செவிலியருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. பாலக்காட்டைச் சேர்ந்த பிரியா கடந்த, 2011- ஆம்