ஜுலை, 14- சந்திராயன்- 3  விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்திய விஞ்ஞானிகள் சாதனை செய்து உள்ளனர். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.-3 எம்- 4 எனப்படும் ராக்கெட் சந்திராயன்-  3 விண்கலத்தை சுமந்துகொண்டு விண்ணுக்குச் சென்றது. இதையடுத்து அதை குறிப்பிட்ட நீள வட்டப் பாதையில் நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். சந்திராயன்- 3 ஏவப்படுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்Continue Reading

பருவமழையால் டெல்லி, இமாச்சலபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. இமாச்சலபிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.42 பேர் இறந்து போனார்கள். டெல்லியில் வெளுத்து வாங்கிய மழையால் தலைநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.கடந்த 45 ஆண்டுகளுக்குப்பின் யமுனை ஆற்று நீரின் அளவு 208 மீட்டரை தாண்டியுள்ளது. முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.உச்ச நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்லும் சாலைகளும்Continue Reading

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை , கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்துள்ளார். மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ,தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் என  பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளது. முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளContinue Reading

மக்களவை  தேர்தல் அடுத்த ஆண்டு  ஏப்ரல் அல்லது மே மாதத்தில்  நடைபெற உள்ள நிலையில்,பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் பாட்னாவில்  ஏற்கனவே  முதல் கட்ட  ஆலோசனையை முடித்துள்ளன. அடுத்த கூட்டம் பெங்களூருவில்  17- ஆம் தேதி நடைபெற உள்ளது. பாட்னா கூட்டத்தில் கலந்து கொள்ளாத சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் கூடத்தில பங்கேற்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். எதிர்க்கட்சிகள் Continue Reading

தமிழில் வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குநர்களின் அடுத்த கனவாக இருப்பது இந்திப்படம். கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்கள் கோடம்பாக்கத்தில் இருந்து பாலிவுட் சென்று, சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தவர்கள் தான். தமிழில் விஜய்க்கு தொடர் ஹிட் கொடுத்த அட்லியும் இந்திக்கு போய் உள்ளார். ‘பிகில்’ படத்துக்குப் பிறகு  அவர் இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான்,கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம்- இது. நயன்தாரா, விஜய்Continue Reading

*யமுனா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது..பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை. மேட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு. *டெல்லியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது.. தலை நகரில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல். *இமாச்சல் பிரதேசத்தில் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு.. முக்கிய சுற்றுலா மையங்களான குலு மற்றும் மணாலி நகரங்கள் முடக்கம். *ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மதியம் சந்திராயன் – 3Continue Reading

ஜுலை, 13- முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு அடுக்குகளாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு, தி.மு.க.மற்றும் கலைஞர் மீது பற்றுள்ள தன்னார்வலர்கள் என பல தரப்பினர் பல விதங்களில் கலைஞரை கொண்டாடுகிறார்கள். கருணாநிதி,புத்தகங்களின் காதலர். அவரது ஆழமான வாசிப்பும், படைப்பாற்றலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். பள்ளிப்பருவத்தில் எழுத ஆரம்பித்தவர், 94 வயது வரை எழுதிக்கொண்டே இருந்தார்.அவர் தொடாத துறைகளே இல்லை.’எழுத்தாளர்’கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில்Continue Reading

பெருக்கெடு்த்து ஓடும் யமுனா ஆறு தலைநகர் டெல்லியின் தாழ்வான இடங்களில் புகுந்து விட்டது. நேற்று பகலை விட இரவில் யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்ததே இதற்கு காரணமாகும். சாலைகளையும் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் டெல்லி அரசு அவசரக் கால நடவடிக்களை இரவில் எடுக்க நேரிட்டது. அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் அளவு அதிகரிக்கப்பட்டதே யமுனையில தண்ணீர் மட்டும் உயருவதற்கு காரணமாகும்.Continue Reading

இந்திய சினிமாவை உலக அளவில் கவனிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் ராஜமவுலி. பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்கள் இவருடைய இயக்கத்தின் மகுடங்கள். காட்சி அமைப்புகள்,கதை சொல்லும் விதம் என அனைத்திலும வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் ராஜமவுலி. பாகுபலிக்குப் பிறகு அவர் இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’. படமும் இன்னுமொரு வெற்றிக் காவியம். அந்த படத்தில் இடம்பெற்று உள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகின் உயரிய திரை விருதான ஆஸ்கர்Continue Reading

நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சித்தாந்தங்கள் உண்டு. ஆசைகளும் இலக்குகளும் வெவ்வேறானவை. ஆனால், மூன்றாம் முறையாக பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்து விடக்கூடாது  என்பதில் அவர்களிடையே கருத்து பேதம் இல்லை. இந்த ஒற்றைப்புள்ளியை மையமாக வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கடந்த சில மாதங்களாவே மும்முரமாக இறங்கினார். இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது.பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அவர் ஏற்பாட்டில் நடந்தContinue Reading