சொகுசாக உட்கார்ந்துகொண்டு வன்மங்களை விதைப்பவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறிய அவர் சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்றார்.நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சசர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது..Continue Reading

ஜுலை, 11 – தமிழகத்தில் மதுக்கடைகளை தனியார் ஏலம் எடுத்து, மது விற்பனை செய்தபோது ‘டெட்ரா பேக்’ எனப்படும் காகித டப்பாவில் மதுபானம் விற்கப்பட்டது. விலை குறைவு என்பதால் ’டெட்ரா பேக்’ மது விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.பின்னர் அரசாங்கமே மது விற்பனையில் நேரடியாக இறங்கியபோது ’டெட்ரா பேக்’ விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் காகித டப்பாக்களில் மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம்Continue Reading

ஜுலை, 11- இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி  உள்ள தமிழ் திரைப்படம் ’லெட்ஸ் கெட் மேரிட்’( (Lets Get Married) . சுருக்கமாக- ‘எல்.ஜி.எம்’. காதலை மைய இழையாக கொண்டு தயாராகி இருக்கும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். ஹரிஷ்Continue Reading

தமிழ்நாட்டு மக்களின் சமையல் பொருட்களில் முன்பெல்லாம் அரிசிக்குதான் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். அந்த நிலை கடந்த சில நாட்களாக மாறி காயகறிகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை உச்சத்தில்தான் உள்ளது. விலை குறைவதாக செய்திகள் வெளியானலும் கூட தெரு முனை கடைகளில் கிலோ ரூ 140 என்ற விலை பெரும்பாலான இடங்களில் குறையவில்லை. இந்த சூழலில் சின்ன வெங்காயத்தின் விலையும்Continue Reading

ஜுலை, 11- இளையதளபதி விஜயும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் ஏற்கனவே மாஸ்டர் எனும் சூப்பர் டூப்பர் படத்தை கொடுத்தனர்.மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.Continue Reading

*வட மாநிலங்களில் கன மழை தொடருகிறது..இமச்சால், அரியானா, உத்தராகாண்ட் மாநிலங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, இயல்பு வாழ்க்கை முடக்கம். *யமுனா ஆறு கரை புரண்டு ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. பாதிக்கபட்ட இடங்களில் படகு மூலம் அமைச்சர் ஆய்வு. *மலை மாநிலமான இமாச்சலில் நிலச்சரிவு.. மண்டி- குலு இடையேயான சாலை, பியாஸ் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. *பல மாநில வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிContinue Reading

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து  கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில்  நேற்று காலை எட்டு மணியுடன் முடிவடடைந்த 24 மணி நேரத்தில் 15 சென்டிமீட்டர் மழை பெய்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழையாகும். மேலும் இமாச்சல பிரதேசம், அரியானாContinue Reading

ஜுலை, 10- அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலத்தில் இப்போது உச்சக்கட்ட சீசன். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெளுத்து வாங்கும் மழையால் அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால், சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்கினர். இதமான சாரலின் அரவணைப்பில் அவர்கள் குளிர்ந்து போனார்கள். பேரிறைச்சலோடு மூலிகை தண்ணீர் பொழிந்த பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அலை மோதியது.குடும்பம் ,குடும்பமாக வந்திருந்த பயணிகள் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர்.Continue Reading

மக்களவை தேர்தலோ, சட்டப்பேரவை தேர்தலோ வருவதற்கு முன்பாக பிரதான அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி தங்கள் வலிமையை வெளிச்சம் போட்டு காட்டுவது வழக்கம். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் மதுரையில் மாநாடு நடத்தி ‘மாஸ்’ காட்ட முடிவு செய்துள்ளது, அ.தி.மு.க. இந்த மாநாடு மதுரை விமானநிலையம் அருகே கருப்புசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமிContinue Reading

சொந்த ஊரில் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிப்பதை, வெளிநாடு சென்றால் , சொற்ப ஆண்டுகளில் அள்ளி விடலாம் என்ற கனவில் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர்  விமானம் ஏறி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஆண்கள்தான் வெளிநாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள். அண்மைக்காலமாக பெண்களும் வெளிநாடுகளுக்கு பறந்த வண்ணம் உள்ளனர். வீட்டு வேலைக்கு என  அந்நிய தேசங்களுக்கு ,குறிப்பாக அரபு நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படும் பெண்கள், அங்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Continue Reading