மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும்  வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.ஆனால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களோ, மாநில தலைவரை உடனடியாக மாற்றிவிட்டு தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என டெல்லி தலைமைக்கு நெருக்கடி கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லிபறந்து சென்று அங்கு முகாமிட்டு உள்ளார். அழகிரி தலைவராக பதவி ஏற்றுContinue Reading

ஜூன் – 27 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை எனச் சொல்லப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் திடுக்கிடும் தகவல் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவைContinue Reading

தக்காளி விலையைக் கேட்டால் தலை வெடித்துவிடுவதுப் போல இருக்கலாம். உலகம் முழுவதும் மூன்று காய்கறிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் இந்த மூன்றுந்தான் அவை. சென்னையில் கோயம்பேட்டில் உள்ள காய்கறிச் சந்தை இந்தியாவின் பெரிய சந்தைகளில் ஒன்று. ஆனால் சுத்தமாக இருக்காது என்பது தனிக்கதை. இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடாகம், தெலுங்கானா,மராட்டியம் போன்ற மாநிலங்களி்ல் இருந்து தினமும்  லாரிகளில்Continue Reading

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் உச்சம் தொட்டவர்கள் மூன்று பேர்.‘மச்சானப்பாத்தீங்களா?’ என அன்னக்கிளியில் ஆரம்பித்த இளையராஜாவின் இசைப்பயணம் ஆயிரம் படங்களை தாண்டி  அவரை ஓட வைத்துக்கொண்டிருக்கிறது. ரோஜா  படத்தின் ’சின்ன சின்ன ஆசை’ மூலம் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆஸ்கர் வரை உயர்ந்தார். நடிகர் ராகவேந்தரின் மகனான அனிருத், “3” படம் மூலமாக 21 வயதில் சினிமாவுக்கு வந்தார்.ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமும் அதுதான் தனுஷ்-Continue Reading

ஜூன்,26. சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை போலிஸ் துணையுடன் அதிகாரிகள் அகற்றியபோது பதற்றமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டில் முக்கியமான கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இருக்கையில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மட்டும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் ஆனித் தரிசனம் நடைபெறுவதற்கு முதல் நாள் தீட்சிதர்கள் திடீரென கனகசபை மீது ஏறிவந்து பக்தர்கள்Continue Reading

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால்,யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018- ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்..இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த  சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சுகனேஸ்வர் கோயிலில்  ஆகமத்தின் அடிப்படையின் ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளContinue Reading

ஜுன்,26- அமைச்சர் செந்தில்  பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சட்டப்படி சரியா? தவறா என்ற  விவாதம் அனைத்துத் தரப்பிலும் நடை பெறுகிறது. சட்டம் எது சொன்னாலும் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அரசியல் நெறிப்படி அமைச்சராக நீடிக்கக்கூடாது  என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குContinue Reading

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,, தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847.கடந்த ஆண்டை விட 18 ஆயிரத்து 767 பேர் அதாவது 11.09% கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர்.Continue Reading

தமிழ்நாட்டில் தனியார் பேருந்தின் முதல் ஓட்டுநர் கோவை சர்மிளாவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசாக வழங்கி தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். தனியார் பேருந்து ஓட்டுநராக 24 வயது சர்மிளா சில மாதங்கள் முன்பு பணியாற்ற தொடங்கியது முதலே அவருக்கு பாரட்டுகள் குவிந்து வந்தன. வலை தளங்களில் அவரை முன் மாதிரி பெண் என்று அனைவரும் புகழந்துப் பேசினார்கள். சர்மிளாவை பாராட்டு வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்Continue Reading

படத்தை அடுத்து விஜயும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் இரண்டாவது படமான ‘லியோ’ 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிர்மாண்டமாக தயாராகியுள்ளது. இன்னும் 6 நாட்கள் தலக்கோணத்தில் ஷுட்டிங் நடத்தி விட்டால் படத்தின் ஆயுத பூஜை  தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டம். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார் . கேங்ஸ்டர் படமான லியோவில் இந்தி நடிகர் சஞ்சய்தத், அர்ஜுன்,மன்சூரலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ,பாபு ஆண்டனி ஆகியContinue Reading