தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் மது குடிப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிடுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவிடுகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் மது குடித்த இருவர் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். தச்சங்குறிச்சி 4 – வது வார்டு உறுப்பினர் முனியாண்டி (55), கூலித்Continue Reading

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்ட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை ஜூலை 1ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சிறையில் அடைக்குமாறு மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் கடந்த 7-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார் என்பது சூர்யாContinue Reading

மணிப்பூரில் சுமார் நாற்பது நாட்களாக தொடரும் கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நூறை தாண்டி விட்டது. ராணுவம் நேரடியாக களம் இறங்கியும் கலவரத்தைக் கட்டுப்படுத்து முடியவில்லை. இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு  ஏற்பட்டு விலை வாசி உயர்ந்து இருக்கிறது.பல ஆயிரம் பேர் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இத்தனைக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சிதான் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சிContinue Reading

சென்னை, ஜுன் 17, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டு உள்ளது. குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள அவர் அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஒப்புதல் தர மறுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் கலால் ஆயத் தீர்வையை கூடுதலாக அமைச்சர் முத்துசாமி கவனிப்பதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல்Continue Reading

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை முற்றிலும் வறண்டு போய் இருப்பதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, மாநகருக்கான குடிநீர் ஆதாரமாக உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 45 அடிகள் வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்குContinue Reading

காவல் துறையின் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பெண் காவல் துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இந்த பரபரப்பு தண்டனையை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது  பாதுகாப்புப் பணிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ராஜேஷ் தாஸ்  சகContinue Reading

ஜுன் 16… கடந்த காலங்களில் திமுக எத்தனை முறை சிபிஜ விசாரணை கேட்டு உள்ளது என்பதை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் திமுகவை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கை கொஞ்சம் சூடாகவே உள்ளது..படியுங்கள்.. “தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது. கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல்Continue Reading