மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை செயலாளர் இறையன்பு… சென்னை ஓஎம்ஆர் – ஈசிஆர் சாலையை இணைக்கும் கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். சுமார் 42 கோடி மதிப்பீட்டில் 1.7 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர்Continue Reading

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் லுங்கியில் புதுப்படம் பார்க்க வந்த இளைஞர் தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் எம்.கே.ஜி திரையரங்கில் ராகவா லாரன்ஸ் நடித்து தமிழ் புத்தாண்டு அன்று வெளியான ருத்ரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை காண திருவண்ணாமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கலம் கிராமத்திற்கு 11 இளைஞர்கள் வந்துள்ளனர். இந்த 11 இளைஞர்களில் ஒருவர்Continue Reading

தமிழ்நாட்டின் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான இரண்டு மாத தடைக்காலம் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் இந்த தடை அமலுக்கு வந்திருக்கிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்டு உள்ள தடை  ஜூன் 14-ந்தேதி வரை தொடரும். இந்த தடை உத்தரவினால் எந்த ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனர்கள் கடலுக்குச்Continue Reading

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முந்தைய அரசால் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக 10.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார் . சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அளித்த பதிலில் முதல்வர் ஸ்டாலின் இதனை தெரிவித்து உள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆணையம்Continue Reading

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,000த்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு தொற்று உறுதி. தற்போது 44,998 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 230 நாட்களில் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Continue Reading

கர்நாடக மாநிலத்தில் கர்நாடக பால் கூட்டமைப்பு, அம்மாநில விவசாயிகளிடம் இருந்து பாலை மொத்தமாக வாங்கி நந்தினி என்ற பிராண்ட் பெயரில் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனம் கர்நாடக சந்தையிலும் களம் இறங்க உள்ளதாக அறிவித்தது. தலைநகர் பெங்களூருவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் என்று அமுல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து அமுல்Continue Reading

”அண்டை மாநிலத்திலிருந்து விதவிதமாகப் போதைப்பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய கேந்திரமாக புதுச்சேரி மாறியிருக்கிறது”- புதுச்சேரி அ.தி.மு.க புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலம் முழுக்க முழுக்க இரவு நேர மதுபான பார்கள், ரெஸ்டோ பார்கள், கடைகள் திறந்திருப்பதால் சட்டம் – ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டுக் கிடக்கிறது. மதுபான பார்களும், ரெஸ்டோ பார்களும் இரவுContinue Reading

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்தல் அளித்து இருக்கிறார். சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதல்-அமைச்சர் தனி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர்Continue Reading

ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பியது தவறு  என்று சிவகங்கை பள்ளியில் தனது நிதியில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்த பின் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார் தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது என்பது புது புரளி  என்று செய்தியாளர்களிடம் கூறிய சிதம்பரம், இந்தContinue Reading