டிசம்பர்-03, தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலை பேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் ஒன்றிய அரசு வழங்கும் என முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்ததாக தெரிகிறது. இதனிடையே தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அவர், தமது அறிக்கையில் புயலினால்Continue Reading

நவம்பர்-30, வங்கக் கடலில் உருவான பெஞ்சல் என்ற புயல் கரையைக் கடக்க உள்ளதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இரண்டாவது நாளாக நல்ல மழை பெய்து வருகிறது. மணிக்கு 7கிலோ மீட்டர் வேக்த்தில் நகர்ந்து வரும் புயல், மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்து வரும் கன மழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் நிலை எற்பட்டு உள்ளதுContinue Reading

நவம்பர்-29, மதுரை அருகே உள்ள அரிட்டாபட்டியில் சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அரிடடாபட்டியில் சுரங்க நடவடிக்கை மேற்கொண்டால் அது ஈடுசெய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்தும். மக்கள்தொகை அதிகம் உள்ள கிராமங்களில் சுரங்கம் தோண்டுவது மக்களை பாதிக்கும். வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.Continue Reading

டெல்லி-நவ,25- கடந்த 2017 ஆம் ஆண்டு ₹6,967 கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கான பதிதில் கடந்த 1ம் தேதி வரை, ₹3.48 லட்சம் கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன என்று அரசு விளக்கம் கொடுத்து உள்ளது.Continue Reading

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு 215 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. இதனால் மராட்டியத்தில் பாஜக கூட்டணி அரசு அமைகிறது. காங்கிரஸ் கூட்டணி 62 இடங்களுடன் எதிர்கட்சி வரிசையில் அமருகிறது. இதர கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைக்கிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜெஎம்எம் –Continue Reading

நவ-21, சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பயணம் செய்தனர். விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து அமைச்சர் வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவது குறிப்பிதக்கது. *Continue Reading

வாரங்கல்- நவ- 20. தெலங்கானா மாநிலம் வாரங்கலில் ஸ்டேட் பேங்க் லாக்கரில் இருந்து ரூ 14.94 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கிக் கட்டிடத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், எச்சரிக்கை மணிக்கான ஒயர்களை அறுத்து, பின்னர் கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து நகைகளை திருடியுள்ளனர். கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா ரெக்காடரையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.Continue Reading

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான திருமண உறவில் இருந்து பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு தங்களுக்கு இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவாகிவிட்டது என்றும், சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 1995ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹாதிஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.Continue Reading

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தகவல் தொடர்பு சேவை மேம்படுத்துவதற்காக ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்தது. 4700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோள் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவில் உள்ளContinue Reading

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரையொட்டி, வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. நவம்பர் 24- ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்து இருக்கின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஓத்துழைப்புத் தரவேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதுContinue Reading