மே.29 துருக்கில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.14சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் எர்டோகன் 3வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு அதிபராக பதவி ஏற்றார். அன்றுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் எர்டோகன் ஆட்சி நடத்திவரும் நிலையில், கடந்த 14ம் தேதி அதிபர் தேர்தலுக்கானContinue Reading

சீனா உருவாக்கிய C919 எனப்படும் முதல் பயணிகள் விமானம் இன்று தனது சேவையை தொடங்கியது! சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள C919 எனப்படும் முதல் பயணிகள் விமானம் இன்று தனது சேவையை தொடங்கியது. ஷாங்காயின் ஹாங்கியாவோ சர்வதே விமான நிலையத்திலிருந்து 130 பயணிகளுடன் தலைநகர் பெய்ஜிங்கிற்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. ஏர்பஸ் A320neo மற்றும் போயிங் 737 MAX ஜெட் விமானங்களுக்கு போட்டியாக C919 விமானத் திட்டம் கடந்த 2007-ம் ஆண்டுContinue Reading

May 28, 2023 டோக்கியோ : ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும்,Continue Reading

மே.27 சீனாவில் பரவிவரும் ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை கொரோனா வைரசால், ஜூன் மாதத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும், வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை உருவாக்கியது. தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்த நிலையில், உலக அளவிலானContinue Reading

May 26, 2023 முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து இன்று நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,”பரந்து விரிந்த இந்தியContinue Reading

மே.26 தமிழக முதலமைச்சர் 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்த அவர், நேற்று ஜப்பான் சென்றடைந்தார். சென்னையில் 2024 ஜனவரியில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்றுContinue Reading

May 25, 2023 பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு பிந்தைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக டிவிட்டர், மெட்டா, அமேசான் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் என பல முன்னணி சமுகவலைத்தளத்தின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.Continue Reading

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு சிட்னியில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இரு நாட்டு வணிகம்Continue Reading

மே.24 ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் புதிதாகத் திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் இந்திய கலைஞர்களின் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதியும் சிறப்பாக வரவேற்றனர். சிட்னி நகரில் கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துContinue Reading

ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்த ரே ஸ்டீவன்சன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58 ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ,ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் ஆர் ஆர் ஆர்.  தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் சுமார் 1150 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது . இந்த படத்தில் சர் ஸ்காட் என்றContinue Reading