June 08, 23 அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியுள்ளது. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று அ.தி.மு.க சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்Continue Reading

June 08, 23 தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளில் நவீன தொழில்நுட்பங்களில் தேர்ந்த தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் 71 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ 2877.43 கோடி மதிப்பீட்டில் 4.0 தர நிலையிலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்Continue Reading

திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் டீசலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட விஜயராகவன் என்பவரிடம் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலர்கள் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு பணிகளுக்காக ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி உள்ளார்கள். இதற்காக தமக்கு தரப்பட வேண்டிய  ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயை விஜயராகவன்Continue Reading

தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் பேர் ஆளுநரின் செயல் பாட்டினால் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி உள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறிய பொன்முடி, கல்லூரிப்Continue Reading

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மிளகாய் பொடி தூவி சுஷாந்த் என்ற நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கத்தை வழிப்பறி செய்த குற்றவாளிகளை கேரள மாநிலம் மூணாறில் வைத்து தமிழக போலீசார் கைது செய்து உள்ளனர். நெல்லை டவுனில் நகைக் கடை நடத்தி வரும் சுஷாந்த் தமது உதவியாளருடன் கடந்த 30 ம் தேதி அதிகாலை காரில் திருவனந்தபுரத்திற்கு நகை வாங்குவதற்காக புறப்பட்டார். அப்போது நாங்கு நேரி அருகேContinue Reading

June 08, 23 ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஸ் நரவனே தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு ககன்தீப் சிங் பேடி மீது புகார் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ” எனது மனசாட்சியின் முடிவை பகிரங்கப்படுத்துகிறேன். இதனால் இதுபோன்ற எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும்” என பதிவிட்ட நிலையில் அந்த பதிவை அவர் அழித்துவிட்டார். மணீஸ் நரவனே தலைமை செயலாளருக்கு எழுதியுள்ளContinue Reading

June 08, 23 ஆவின் நிறுவனத்தில் போலி பதிவெண் கொண்ட வாகனத்தை இயக்கி அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் ஆவின் நிர்வாகத்தில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனம் செயல்பட்டதாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஆவின் உதவி பொது மேலாளர் (விற்பனை பிரிவு) சிவக்குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 06.06.2023 அன்று பணியில் இருந்தContinue Reading

June 08, 23 முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை மெரினாவில் இன்றிரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் துக்கி போட்டாலும் கட்டு மரமாக தான் மிதப்பேன், அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் கவிழிந்து விட மாட்டீர்கள்’ என்ற கலைஞரின் வசனத்தை தொடங்கி முதல்வர் தனது உரையை தொடங்கினர். மேலும்,Continue Reading

June 08, 23 2-வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று, 2024-ம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் தேதியை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, பொது நூலகத்துறை இயக்குநர்Continue Reading

சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் எனும் புதிய ஆன்லைன் வழி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஜே.இ இ. உள்ளிட்ட எந்த வித நுழைவுத் தேர்வுகளும் இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் வாயிலாக பயில டேட்டா சயின்ஸ் என்ற பாடத்திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதை அடுத்து ஆன்லைன் வாயிலாக பயிலக் கூடிய பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம் எனும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்புவோர்Continue Reading