சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு இடையே ஓபிஎஸ், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியதாக தெரிகிறது. சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன. அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் செயல்பட்டுவருவதாக ஈபிஎஸ் அணி குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இந்த சந்திப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்- சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்Continue Reading

மே.6 தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 8-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வி துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில்Continue Reading

மே.6 திருப்பூரில் பிரிண்டிங் நிறுவனத்தின் கட்டுமான சுவர் சரிந்து விழுந்த விபத்தில் கட்டிட தொழிலாளி ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் – கொங்கு மெயின் ரோடு, கந்தசாமி லே அவுட்டை சேர்ந்தவர் முத்துராஜா(வயது40). இவர் தனக்கு சொந்தமான கட்டடத்தில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்தக் கட்டத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராம்மூர்த்தி(வயது50), பிரவீன்(வயது22) ஆகியோர் வேலைContinue Reading

மே.5 தமிழகத்தில் அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் கீழ்Continue Reading

மே.5 மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 23-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்துContinue Reading

சு.வெங்கடேசன் எம்.பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “திராவிட மாடல் செத்துப்போன தத்துவம்.” “மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.” “பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்” என்று சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, களைகளுக்கு கோடாலிகள்மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.Continue Reading

“ஆளுநர் மாளிகை செலவுசெய்த ரூ.11.32 கோடிக்கான விவரங்கள் அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதியில் விதிமீறல் நடக்கிறது.” – பி.டி.ஆர். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இருக்கும் மோதல் போக்கு அனைவரும் அறிந்த ஒன்றே. அதே நேரம் ஆளுநர் மாளிகை செலவுக் கணக்கு விவகாரம், கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்ட தேநீர் விருந்தை தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தது முதல் பெரும் விவாதப்பொருளாகவேContinue Reading

மே.4 தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். பல்லைக்கழகங்கள் தொடர்பான 8 மசோதாக்களை தடுத்து நிறுத்தியதற்குக் காரணம், கல்வி என்பது ஒரு பொதுவான விஷயமாக இருக்கிறது என்றா. தொடர்ந்து பேசிய அவர், 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) ஒரு வரையறை உள்ளது. அதனுடன் எந்த மாநில விதிகளும்Continue Reading

மே.4 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தை அக்னிநட்சத்திர காலம் அல்லது கத்திரி வெயில் காலம் என அழைக்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான கத்திரிContinue Reading

மே.4 சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டுவந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என்று கூறி சுமார்Continue Reading