ஏப்ரல்.27 திருவாரூரில் அமைக்கப்பட்டுவரும் கலைஞர் கோட்டம், கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே, திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம்Continue Reading

ஏப்ரல்.27 தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஆண்டுதோறும் கூடுதலாகContinue Reading

சர்ச்சைக்குரிய ஆடியோ தொடர்பாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வீடியோ பதிவு மற்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 12 மணி நேர வேலை சட்டத் திருத்தம், Dmk Files, திருமண மண்டபங்களில் மதுபான விருந்துக்கு அனுமதி விவகாரம், ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை, நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா என தொடர்ந்து திமுகவிற்கு அரசியல் நெருக்கடி இருந்து வரும் வேளையில் முதலமைச்சர் குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட இந்தContinue Reading

சிங்கப்பூரில் 1 கிலோ போதைப்பொருளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி நபரான தங்கராஜு சுப்பையா பல்வேறு சட்டப்போராட்டங்களை தாண்டி இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார். அவர் இறப்பதற்கு முன்பு அவர் ஆசையாக கேட்டு சாப்பிட்ட உணவு வகைகள், தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்படும் போது அவர் பேசியது உள்ளிட்டவை குறித்து இங்கு காண்போம். சிங்கப்பூரை சேர்ந்தவர் தங்கராஜு சுப்பையா (46). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயேContinue Reading

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது முகாம் அலுவலகமாக செயல்பட்டது கொடநாடு எஸ்டேட். அதிகார மையமாக செயல்பட்ட அந்த இடத்தில் அவர் மறைந்த பின்னர், சசிகலா சிறை சென்ற பின்னர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் சயான், வாளையாறு மனோஜ்,Continue Reading

சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு,Continue Reading

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு அருகே தொழுநோய் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைத்து வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மற்றும் நாளைContinue Reading

ஐ.நா வேண்டுகோளை நிராகரித்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்கராஜுக்கு தூக்குத் தண்டனையைச் சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நபருக்குச் சிங்கப்பூர் அரசு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சுமார் ஒரு கிலோ போதைப் பொருளைக் கடத்தியதாகக் கடந்த 2013 ஆம் ஆண்டு இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியதாகத் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜ் சுப்பையா என்பவரும் கைது செய்யப்பட்டார்.Continue Reading

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்துள்ளார், கனகராஜை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர் என்ற அடிப்படையில் ஜோதிடரிடம் விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக்குழு முடிவு. எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி கனகராஜிடம் கடந்த வாரம் புலனாய்வுக்குழு விசாரணைContinue Reading

ஏப்ரல்.26 தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாகி அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் அவர் ரோந்து செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றுள்ளார். அப்போதுContinue Reading