ஏப்ரல்.20 அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியின் வசமாகியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கவும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும்Continue Reading

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று (ஏப்.20) காலை கேள்வி நேரத்துடன் பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அதனைத்தொடர்ந்து 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர், “மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு இந்த திராவிட மாடல் அரசு, மரியாதை செய்யும் மகத்தான அறிவிப்பை வழங்குகிறேன்.Continue Reading

கர்நாடக தேர்தல் - வேட்பாளரை அறிவித்த ஓ.பி.எஸ்

ஏப்ரல்.20 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் டி.அன்பரசனை வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 10-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறுது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப்போட்டி நிலவும் நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுContinue Reading

ஏப்ரல்.20 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளை காவல்துறையினர் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அங்கு பணியில் இருந்த ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்ளிட்ட காவல்துறையினர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்Continue Reading

ஏப்ரல்.20 திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக.,வினரின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக.,வினர் குறித்து அவதூறு தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் நோட்டீஸ்Continue Reading

வாட்ச் பிரச்சினை, சொத்து பட்டியல், ஊழல் பட்டியல், கட்சிக்குள் பங்காளிகள் சண்டை என தமிழ்நாடு அரசியல்களம் படுபிஸியாக பயணித்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது அதிகார பூர்வ இணைய பக்கமான TN DIPRயில் வெளியிட்டுள்ள செய்தி, புதுவித சர்ச்சையை கிளப்பியுள்ளது. TN DIPR பக்கத்தில் முதலமைச்சரின் அறிக்கை, சாதனைகள், தமிழ்நாடு அரசின் அன்றாட பணிகள், ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்,Continue Reading

ஏப்ரல் 19 – சென்னை மெரினா கடற்கரையில் லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை கடலோரம் போடப்பட்ட லூப் சாலையை ஆக்கிரமித்து மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கைContinue Reading

ஏப்ரல்.19 கோவையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம், தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என்று மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார். கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தி்ல், கல்லீரல் தொடர்பான அனைத்து  நோய்களையும் குணப்படுத்துவது மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான  பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குனர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில்,  பிரத்யேக கல்லீரல் செயல்Continue Reading

ஏப்ரல்.19 தமிழகத்தில் மின்சார நிலைக்கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை (ஏப்.20) மாநிலம் தழுவிய கதவைடைப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக போசியா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்சார நிலைக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை தமிழகம் முழுவதும் ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, 23 தொழில் அமைப்புகள் இணைந்த போசியா கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். கோவையில் செய்தியாளர்களிடம் டான்சியா தலைவர் மாரியப்பன்,Continue Reading

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் புதன் கிழமை நடத்த உள்ள ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் தாம் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்க செய்த மனுவை விசாரித்த டெல்லி உயாநீதிமன்றம் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த கெடு முடிவதற்கான அவகாசம்Continue Reading