சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த 41 வயதான ஆண் ஒருவருக்கு அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ,மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைContinue Reading

பா.ஜ.க-வின் 44-ம் ஆண்டு நிறுவனநாளான இன்று, உலகிலேயே மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பா.ஜ.க-தான் என்றும், 365 நாள்களும் பா.ஜ.க-வுக்கு உறுப்பினர் சேர்க்கைதான் என்றும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். முன்னதாக பா.ஜ.க-வின் 44-ம் ஆண்டு நிறுவனநாள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களிலுள்ள பா.ஜ.க அலுவலகங்களில் இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போன்று தமிழ்நாட்டிலும்,Continue Reading

“கலாஷேத்ரா கல்லூரியில் நான் படித்தபோது எனக்கு எந்தப் பாலியல் தொல்லையும் இருந்ததில்லை. இதை அதிகாரத்துக்காகச் செய்யப்படும் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன்.” – `பிக் பாஸ்’ அபிராமி சென்னை கலாஷேத்ரா கல்லூரியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் நடன ஆசிரியர் ஹரி பத்மன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான `பிக் பாஸ்’ அபிராமி ஹரிContinue Reading

தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். “‘தி கிரேட் டிக்டேட்டராக’ தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் அவர்கள் பேசி வருவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல”. எதையும் துணிச்சலாக ஏற்கவோ,Continue Reading

சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை என்று பல்வேறு காரணிகளை கூறி நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் எண்ணித் துணிக’ நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. நிகழ்வில்Continue Reading

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏவாக முறைப்படி பதவியேற்றுக்கொண்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால்,சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்Continue Reading

5 பேர் உயிரிழப்பு – அமைச்சர் விளக்கம். குளத்தை தூர்வாராமல் தீர்த்தவாரி நடைபெற்றது குறித்து முதல்வர் தம்மைக் கண்டித்ததாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளளார். சென்னையின் புறநகராக மூவரசன் பேட்டை குளத்தில் புதன் கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியின் போது ஐந்து பேர் இறந்தது குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அளித்த பதிலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோயில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும்Continue Reading

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மூணார் சாலையில் உலா வந்த காட்டுயானை, சாலையில் சென்ற வாகனங்களைத் தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணார் சாலையில் நடுரோட்டில் நின்ற காட்டு யானை (கொம்பன்) முன்பக்கத்தில் கொம்பினால் குத்தியதில் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைப்பேட்டைக்கு சென்ற அமீன் என்பவர், டிப்பர்லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது, உடுமலைப்பேட்டை சின்னார் வனப்பகுதியில் நடுரோட்டில்Continue Reading

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 55வயது பெண் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதையடுத்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு மருத்துவமனைகள், திரையரங்குகள், வணிக வளாகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும்Continue Reading

அண்ணாமலை இரண்டு திரைப்படங்களை வெளியிடப்போகிறார் என்று விமர்சனம் செய்திருக்கிறார் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ். பாஜக இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று தொடர்ந்து தனது குமுறலை கொட்டி வருகிறார் மருது அழகுராஜ். அவர், புத்தாண்டும் புதுப்படமும் என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது: தமிழ் புத்தாண்டு திருநாளாகிய ஏப்ரல் 14-ல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பா.ஜ.க. தமிழ்மாநில தலைவர் அண்ணாமலை “இரண்டரை லட்சம் கோடி” மற்றும்Continue Reading