ஜுலை,28- காங்கிரஸ-திமுக கூட்டணி என்றாலே மக்களுக்கு ஊழல் தான் நினைவுக்கு வருகிறது என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். அவர், ராமேஷ்வரத்தில்.தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்” நடை பயணத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையில் இந்த விமர்சனத்தை முன் வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் சென்றுContinue Reading

ஜூலை, 28- என்.எல்.சி. நிர்வாகம் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளது என்.எல் .சி . தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறைContinue Reading

ஜுலை,28- நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடந்த பேராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உப்பட சுமார்  500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கு மூண்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். என்எல்சி நிறுனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்டத்தில் சேத்தியாதோப்பு அருகே சுமார் 10 கிராமங்களில் நிலம் எடுக்கு பணியை புதன்கிழமை அன்று தொடங்கியது. உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் எடுக்கப்படுவதகாக் கூறி கிராமContinue Reading

ஜுலை, 28- ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தனி நீதிபதி தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 – ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரமணிய குருக்கள்Continue Reading

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திருச்செந்தூர் கோயில் அதிகாரி மரணத்துக்கு நீதி கேட்டு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி நடைப்பயணம் நடத்தினார். மது விலக்கை அமுல் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நடைப்பயணம் செய்துள்ளார். இப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம். ‘என் மண் என் மக்கள்’ எனContinue Reading

ஜுலை,27- விளைந்து கதிர்விடும் நெற்பயிர்களை இயந்திரங்களைக் கொண்டு என்.எல்.சி.நிர்வாகம் அழிக்கும் காட்சியை பார்க்கும் கல் நெஞ்சக்காரர்கள் கூட கலங்கிப் போய்விடுவார்கள். நெய்வேலியை சுற்றி நடைபெற்று வரும் பயிர் அழிப்பு கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தி  உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. நிறுவனம் தனது இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி கிராமங்களில் கடந்த 2016- ஆம் ஆண்டு விவசாய நிலங்களை கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்குContinue Reading

ஜுலை,27- தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய வளமான துறைகளின் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த ஜுன் மாதம்  14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ‘செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது,சட்டப்பூர்வமானது-அவரை காவலில் எடுத்து விசாரிக்க , அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது’ என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. சிறையில்Continue Reading

ஜுலை,26- மணிப்பூரில்  பெண்களுக்கு  நிகழும்   கொடூரங்களை கண்டித்து தென்காசியில் இரு தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தெற்கு மாவட்ட திமுக. செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்   தமிழ்செல்வியும் கலந்து கொண்டார். இருவருக்கும் இடையே சில மாதங்களாகவே சுமுக பேச்சுவார்த்தை இல்லை.மேடையில் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. சிவபத்மநாதன் பேசி முடித்ததும், தமிழ்செல்வி பேச எழுந்தார். ஆனால் அவரை பேசவிடாமல் சிவ பத்மநாபன் தடுத்து மைக்கைContinue Reading

சொத்துக்களை பாதுகாப்பதற்காக தொழில் அதிபர்கள், வணிகர்கள் ,திரைப்பட நட்சத்திரங்கள், போன்றோர் அரசியலில் நுழைவது, நாடு முழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அநேகமாக அனைத்துக்கட்சிகளுமே அவர்களை அரவணைத்துக்கொள்கின்றன. இந்நிலையில் தென் இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து கோடிகளை குவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அண்மையில் வெளியிட்டது. நாடு முழுவதும் அதிக சொத்துக்களை வைத்துள்ள 100Continue Reading

ஜுலை,26- கலைச்சேவை செய்வதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து அடிக்கடி பெரிய நட்சத்திரங்கள் மலேஷியா செல்வது வழக்கம்.அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் தொழில் அதிபர், கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழ் நடிகர்- நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர். போலீசில் சிக்கியுள்ள வர்த்தகர் பெயர் அப்துல் மாலிக் தஸ்கீர்.அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீம்சல். சின்ன வயதிலேயே மலேஷிய சென்ற மாலிக், துணிக்கடையில் சாதாரண சிப்பந்தியாக  வாழ்க்கையை ஆரம்பித்தார். அங்கு பெரிய நட்புContinue Reading