ஆகஸ்டு, 04- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பொங்கியண்ணன். கோயில் பூசாரியான இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பொங்கியண்ணன்  மனைவி தங்கமணி . விதவையான அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில்,”ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது. எனது கணவர் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். தற்போது, இந்தContinue Reading

ஆகஸ்டு.04- திருநெல்வேலி  டவுன் காவல்நிலையத்தில் உதவி  ஆணையராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா. இவர் தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பகுதிக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். நெல்லையப்பர் கோயிலில் இருந்து  ஆர்ச் வரை உள்ள ஒரு வழி பாதையில் அவரது வாகனம் சென்றது. அது, ஒரு வழிப்பாதை என்பது சுப்பையாவுக்கு நன்றாக தெரியும். விதியை  மீறுகிறோம் என்பதும் தெரியும். அவரது கெட்ட நேரம் , காவல்துறை ஆணையர் வடிவத்தில் வந்தது.Continue Reading

ஆகஸ்டு,03- ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, நிறைவேற்றிய திட்டங்களில் அடித்தள மக்கள் பலன் அடைந்த மகத்தான திட்டம்- ’அம்மா உணவகம்’. ஏழை-எளிய மக்கள் பசியால் துவளக்கூடாது எனும் நோக்கில் கடந்த 2013-ம் ஆண்டு  இதனை கொண்டு வந்தார்.  காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக்குறைந்த விலையில் இங்கு உணவு வழங்கப்பட்டது. சோதனை முயற்சியாக  சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அன்றாடம்Continue Reading

ஆகஸ்டு,02- ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும்  தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திர நாத் எந்த நேரத்திலும் கைது செய்து விசாரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்படுவதை தவிர்க்க அவர் முன் ஜாமீன் கேட்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ரவீந்திர நாத் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பெண் ஒருவர்,சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகாருதான் இதற்கு காரணம். செங்கற்பட்டு அடுத்து உள்ள ஏகாடூரில் வசிக்கும்Continue Reading

ஆகஸ்டு, 01- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் வானத்தில் தென்பட்டது பறக்கும் தட்டு கள் என்ற தகவல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பான படங்களை தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரதிப் வி பிலிப் வெளியிட்டதை அடுத்து விசாரணைகள் உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் கடந்த புதன் கிழமை வானத்தில் பளிச்சென்ற ஒளியுடன் கூடியContinue Reading

ஆகஸ்டு,1- மணிப்பூர் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் வேதனை தெரிவித்து உள்ளர். அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த கலவரத்தின் போது குகி சமூகத்துப் பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோ  பத்து நாட்களுக்கு முன் வெளியானது.  அந்தப் பெண்கள் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதுContinue Reading

ஆகஸ்டு,1- மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால்  4000 பைபர் படகுகள், 300  விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நடுக் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டு வந்த பைபர் படகையும், அதில் இருந்த மீனவர்கள் மூன்று பேரும் தரங்கம்பாடி கிராமத்து  மீனவர்களால் நேற்று சிறைப் பிடிக்கப்பட்டனர்.Continue Reading

ஆகஸ்டு, 1-  தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே இன்று அதிகாலை மூன்று மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கருப்பு நிற ஸ்கோட கார் வேகமா வந்தது.  நிறுத்த முற்பட்ட போது அந்த காரை ஓட்டி வந்தவர் நிறுத்தவில்லை.  உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது கார்Continue Reading

ஜுலை,31- தக்காளியும், தங்கமும் எப்போது விலை கூடும், எப்போது குறையும் என்று வணிகர்களால் கணிக்க முடியாத வஸ்துவாக உள்ளன. இப்போது தக்காளிக்கு பொற்காலம். தமிழக சந்தை சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்வு நீடித்து சில்லறை கடைகளில் ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. காயம் பட்டு யாருக்காவது ரத்தம் வழிந்தால்,’முகத்தில் என்ன தக்காளி சட்னியா?’ என கேட்க முடியாது.Continue Reading

ஜுலை, 31- மக்களவைத் தேர்தலை சந்திக்க ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியும் முழு வீச்சில் தயாராகிவிட்டன. இரு அணிகளும் பெரும் சேனைகளுடன் களத்தில் இறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். ‘இன்றைக்கு தேர்தல் நடந்தால் யாருக்கு வெற்றி கிடைக்கும்?’என்ற ஒற்றைக்கேள்வியுடன் இந்தியா டிவி செய்தி சேனலும், சி என் எக்சும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. முடிவுகள் பரபரப்பு ரகம் நாடு முழுவதும்Continue Reading