ஏப்ரல்.27 கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்து மாம்பழங்களையும் உடன் எடுத்துச்சென்றார். கோவையிலிருந்து விமானம் மூலம் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி கிளம்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் சென்றனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். இதையொட்டி, கோவை விமான நிலையத்திற்கு வந்த ஈபிஎஸ்-க்குContinue Reading

ஏப்ரல்.26 நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கிடப்பில் போடப்பட்டுள்ள தொழில்நுட்பப் பூங்கா விரிவாக்கத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உறுதியளித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2,100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தொழில் நுட்ப பூங்கா திட்டம் அதன்பின் ஆட்சி மாற்றம்Continue Reading

ஏப்ரல்.26 கோவை ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஒரே மாதத்தில்‌ சிறைகளில்‌ உள்ள 2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுத்தரப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில்‌ இருக்கும்‌ கைதிகள்‌ குடும்பத்தினரை பிரிந்து தனிமையில்‌ வாழ்வதால்,‌ மனஅழுத்தம்‌, உடல்‌ நல‌ப்பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்‌. இந்த பிரச்சினைகளில்‌ இருந்து அவர்கள்‌ வெளிவர உதவும்‌ விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்புContinue Reading

ஏப்ரல்.25 சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து நாளை கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள மாநில அரசை கண்டித்து வரும் 26ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறுவாணி அணைக்கும் செல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடிContinue Reading

ஏப்ரல்.25 கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா 4 லட்சம் வீதம் 26 நெசவாளர்களுக்கு 1.04 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த கைத்தறிவு உதவி இயக்குனர் சிவகுமார், சிறுமுகை பகுதியில் கைத்தறி பூங்கா அமைப்பதற்கு அமைச்சர் உறுதி கூறி உள்ளதாகவும், முதற்கட்ட பணிகள் இந்தContinue Reading

தினமும் 12 மணி நேர வேலை மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளடு. இந்த மசோதா பற்றி, சென்னை தலைமை செயலகத்தில், இன்று தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்…Continue Reading

ஏப்ரல்.24 கோவை – அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையத்தை தாண்டி கோல்டுவின்ஸ் பகுதி வரையிலும் 10 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்காக மொத்தம் 304 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இதுவரை 280க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.Continue Reading

ஏப்ரல்.24 பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த 76 வயது முதியவருக்கு முகச்சவரம் செய்து, குளிப்பாட்டி, உணவளித்து, ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்ட பாஜக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் நடக்க முடியாத நிலையில் கடந்த 9 நாட்களாக ஆதரவற்று படுத்து கிடந்துள்ளார். இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு துறை மாவட்டContinue Reading

ஏப்ரல் 23 நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக, ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல்Continue Reading

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தில் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. பணத்தை வைத்து சூதாட்டம் நடத்தும் ரம்மி , போக்கர் நிறுவனங்களுக்கு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. கடந்த பத்தாம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதிContinue Reading