மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. 12 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளதால் மதுரை மாநகரமே கோலகலம் பூண்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரபலம். இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35Continue Reading

சேலத்தில் டாஸ்மாக் கடையில் காலையிலேயே மது விற்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் போது, குடித்துக் கொண்டிருந்தவர்களை கடைக்குள் வைத்துப் பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடைக்குள் சிக்கிக்கொண்ட குடிகாரர்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். சேலம் டவுன் பேருந்து நிலையம் அருகே உள்ள தாதுபாய் குட்டை டாஸ்மாக் மதுபான கடையில் இந்த நிகழ்வு அரங்கேறியது. வழக்கம் போல இந்த மது பான கடையில உள்ள பாரில் இன்று காலையிலேயே குடித்து கொண்டிருந்தனர்.அதுவும்Continue Reading

ஏப்ரல்.23 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானையை படம்பிடிக்க முயன்றவர்களை, அந்த யானை துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர்,செம்மனாரை உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. வழக்கமாக இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது போல இந்த ஆண்டும் காய்த்துள்ளது. இதனால் காட்டுContinue Reading

ஏப்ரல்.23 கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வரும் நிலையில் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோவை, நீலகிரி ஆகிய குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி. கோவையில் மாநகர் மற்றும் புறநகர்Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன்Continue Reading

குஜராக் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தோல்வியை தழுவியது லக்னோ அணி. 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.Continue Reading

ஏப்ரல்.22 கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். கோவையில் பிரசித்திபெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு மகா கணபதி ஹோமம்,சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமரிசையாகContinue Reading

ஏப்ரல் 21 பிறை தெரிந்ததை அடுத்து தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முகமது சலாவுதீன் ஆயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதம் மார்ச் 24 ம் தேதி தொடங்கியது. இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்றாக ரம்ஜான் நோன்பு கருதப்படுகிறது. பிறை தெரிந்தது முதல் தினமும் சூரிய உதயத்திற்கு முன் நோன்பினை துவக்கி, பகல் முழுவதும் தண்ணீர், உணவுContinue Reading

ஏப்ரல் 21 தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதற்கேற்ற வசதிகள் இருந்தால் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக, மின்னணுவியல் துறையில்இருக்கக்கூடிய நிறுவனங்கள், தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள்,Continue Reading

ஏப்ரல் 21 தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி 12 மணி நேர வேலை மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிகContinue Reading