June 13, 23 “நெக்ஸ்ட்” என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், “நெக்ஸ்ட்” தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்விContinue Reading

June 13, 23 அண்ணாமலையின் பேச்சிற்கு அதிமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் அளித்துள்ள பேட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு காட்டமான கருத்துகளை அண்ணாமலை மீது முன்வைத்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏனெனில் அதிமுகContinue Reading

ஈரோடு திண்டல் சக்தி நகரை சேர்ந்தவர் சச்சிதானந்தம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உறவினரான இவர் மதுபான கிடங்குகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்களை விநியோகம் செய்து வருகிறார். மாநில அளவில் இவர் ஒருவரே டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபான கடைகளுக்கு விநியோகம் செய்யும் ஒரே ஒரு ஒப்பந்ததாரராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட சரக்குContinue Reading

June 13, 23 அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சோதனை குறித்த தகவல் கேள்விப்பட்டவுடன், சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள தனது அரசு வீட்டிற்கு வந்தார் அமைச்சர்Continue Reading

ஜுன், 12.. பரபரப்பாக எதையாவது கொளுத்திப் போடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிதாக ஒன்றை தீ வைத்து வீசி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதில்தான் அந்த தீப்பந்தம் உள்ளது.. பேட்டி வருமாறு… ஒரு பூத் தலைவரும் கூட பாஜகவின் ஒரு உயர்ந்த பொறுப்பிற்கும் செல்ல முடியும் என்று அமித்ஷா கூறியுள்ளார். 1982- ல் அமித்ஷா குஜராத் மாநிலத்தில் பூத் கமிட்டித் தலைவராக இருந்தார்.Continue Reading

June 12, 23 மக்களிடம் வரலாற்றை மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. உண்மை பல நேரங்களில் சிலருக்கு கசப்பாகவே இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போதுContinue Reading

June 12, 23 தமிழுக்குப் பதிலாக இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொட்ரபாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் இந்திக்கு, மற்ற இந்திய மொழிகளை விட, எல்லா வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற நன்மைகளைத் தொடர்ந்து அளித்துContinue Reading

மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்; பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்புரமணியன் தெரிவித்து உள்ளார் சென்தி்னையில் பேட்டியளித்த அவர்,  மத்திய அரசின் புதிய நடவடிக்கையால்  மருத்துவ கல்வி இடங்களை அதிகம் வைத்துள்ள தமிழ்நாட்டுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்றார். பொது கலந்தாய்வில் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும்  என்றும்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.Continue Reading

பாரதீய ஜனதா கட்சி முன் வைக்கும் விமர்சனங்கள் அனைத்துக்கும் உடனுக்கு உடன் பதில் சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்வதில்லை என்று வலைதளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது சென்னை மற்றும் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசினார் அப்போது அவர்,Continue Reading

ஜுன், 12.   ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ. எஃப். எஸ் உட்பட 24 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற முதல் நிலை தேர்வு 14 ஆயிரத்து 624 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணிகளான ஐ ஏ எஸ், ஐ பி எஸ், ஐ எஃப் எஸ், உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மேContinue Reading