தலைப்புச் செய்திகள் (23-01-2024)

*தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை?… நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை சுட்டிக் காட்டி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

*நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை … அனைவரையும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் … ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடாந்து உள்ளதால் ஆளுநரை உரையாற்ற அழைக்காமல் பட்ஜெட் கூடத்தொடரை நடத்துவதுப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.


*சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு… பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை ஏலம் விடுவதற்கு பதில், அவற்றை தமிழக அரசிடம் ஒப்படைப்பது நல்லது என்று நீதிபதி கருத்து.

*திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு…. அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் ஜெயக்குமார் .

*பாரதீய ஜனதா கட்சியின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவது நிச்சயம்… சென்னையில் நடைபெற்ற திமுக எம்.பி. டி.ஆர். பாலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு.

*தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு…. கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் தாமாக முன் வந்து சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு

*திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம்… சென்னையில் நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டத்திற்கு பிறகு கனிமொழி எம்.பி. பேட்டி.

*பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினாவை பிடிக்க அமைக்கப்பட்டு உள்ள தனிப்படை போலீசார் பெங்களூர் விரைவு … வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை அடித்துக் கொடுமை செய்ததாக இருவர் மீதும் ஐந்து பிரிவுகளின் வழக்குப் பதிந்து உள்ளது சென்னை காவல் துறை.

*மகாத்மா காந்தி நடத்திய சத்தியாக் கிரகப் போராட்டத்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக கூறுவது தவறு, நேதாஜியின் ராணுவ நடவடிக்கைக்கு பயந்துதான் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தார்கள் … சென்னையில் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த நாள் விழாவில ஆளுநர் ரவி சர்ச்சை பேச்சு.

*சென்னையில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் ஆளுநர் பங்கேற்ற நேதாஜி பிறந்த நாள் விழாவுக்கு வந்தால்தான் மாணவர்களுக்கு வருகைப் பதிவு என்று நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையால் சர்ச்சை … மாணவர்களுக்கு நாட்டு்ப் பற்ற வளர்க்க வேண்டும் என்பதால் அப்படி சொன்னதாக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம்.

*குடியரசு தினம் மற்றும் தைப்பூசம் தொடர் விடுமுறை முன்னிட்டு ஜனவரி 25,26 தேதிகளில் சென்னையில் இருந்து கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள்… கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பிற பகுதிகளுக்கு 175 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாகவும்போக்குவரத்துறை அறிவிப்பு.

*மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நாளை திறக்கப்பட இருக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவதல் அரங்கத்தில் முதல் ஜல்லிக்கட்டு… 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தகவல்.

*மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக ருக்மணி அம்மாள் தேர்வு … அமைச்சர் பிடிஆரின் தாயார் தான் ருக்மணி அம்மாள்.

*நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பொறியாளர் ஏ.சி.காமராஜ் (90) உடல்நலக்குறைவால் மதுரையில் காலமானார்… நதிகள் மற்றும் ஆறுகள் இணைப்பின் மூலம் புதிய நீர்வழி சாலைகளை உருவாக்கலாம் என்ற நோக்கத்துடன், இந்தியாவில் உள்ள நதிகள் மற்றும் ஆறுகளை இணைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்ஏ.சி.காமராஜ்.

*அயோத்தி ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி…முதல் நாளிலியே ராமரை வழிபடுவதற்கு பொதுமக்கள் பெரும் அதரவு.

*ராகுல் காந்தி மேற்கொண்டு உள்ள இந்திய ஒற்றுமை பயணம் அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரத்துக்குள் நுழைவதற்கு தடை விதிப்பு … காங்கிரஸ் தொண்டர்கள் தடைகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றதால் போலீசுடன் மோதல்.

*அசாம் மாநிலத்தில் மாணவர்களை சந்தித்து பேசுவதற்கும் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பதற்றம் … பேருந்து மீது ஏறி நின்று மாணவர்களுடன் ராகுல் உரையாடிய பிறகு பயணம் மேகலாலயா மாநிலத்திற்குள் சென்றது.

*காங்கிரஸ் தொண்டர்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம், அசாம் மாநிலத்தில் பாஜகவை தோற்கடித்து விரைவில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று ராகுல் காந்தி பேச்சு … காங்கிரஸ் தொண்டர்களை பலவீனமானவர்கள் என்று பாஜக நினைக்க வேண்டாம் என்றும் ஆவேசம்.

*நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16- ஆம் தேதி நடைபெற உள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு … அதிகாரிகள் தங்கள் வேலைளை செய்து முடிப்பதற்கான தேதிதான் ஏப்ரல் 16 ஆம் தேதியே தவிர வாக்குப்பதிவு தேயல்லல என்று தேர்தல் ஆணையம் தந்த விளக்கத்தால் பரபரப்பு ஓய்ந்தது.


*மியான்மர் நாட்டின் உள்நாட்டுச் சண்டையில் இருந்து தப்பித்து இந்திய எல்லைக்குள் நுழைந்த அந்த நாட்டு ராணுவ வீரர்களை திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை … ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு மிசோரம் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விழுந்ததில் 8 பேர் காயம்.

*அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, ஹரியானா மாநிலம் பிவானியில் ராம்லீலா நிகழ்ச்சியில், ஹனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் ஹரிஷ் மேத்தா மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழப்பு…. இது நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்து மக்கள் அவரை காப்பாற்ற முன்வராத நிலையில் இறந்து கிடந்த பரிதாபம்.

*சீனாவின் சியான் யாங் ஹாங் 03 என்ற உளவுக் கப்பல் தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தப்படுவது பற்றி மாலே நாட்டு அரசாங்கம் விளக்கம் … நட்பு நாடுகளின் கப்பல்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்வதாக ருத்து.

*காசா முனை மிது நடத்தப்படும் தாக்குதலில் ஒரே நாளில் இஸ்ரேல் வீரர்கள் 24 பேர் இறப்பு … இரண்டு கட்டிடங்களில் வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி மட்டும் இஸ்ரேல் வீரர்கள் 21 பேர் பலி.

*சீனாவின் தெற்கு சின்சியாங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு….தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக நிலநடுக்கத்துகான தேசிய ஆய்வு மையம் தகவல்.

*ஆஸிதிரேலிய ஓப்பன் டென்னிசில் நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம் … பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்னையான பெலாரஸ் நாட்டின் அரினா செபலங்கே அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தல்.

*அயோத்தியில் ராமர் முகத்தை முதலில் பார்த்த 150 பேரில் தானும் ஒருவன் என்று நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம் … அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி ,ஆண்டு தோறும் அயோத்தி செல்ல உள்ளதாகவும் பேட்டி.

*பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக இயக்குவதில் இயக்குநர் சேரன் தீவிரம் … ராமதாஸ் பாத்திரத்தில் நடிப்பதற்கான நடிகரை தேர்வு செய்யும் பணியை தொடங்கி விட்டதாக தகவல்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *