*சந்திராயன்- 3 விண்கலத்தில் பிரிக்கப்பட்ட லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைப்பு .. நாளை மாறுதினம் வேகத்தை மேலும் குறைத்து திட்டமிட்டபடி 23- ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை.

*நிலவை நெருக்கத்தில் இருந்து லேண்டர் எடுத்து அனுப்பிய படங்களை வெளியிட்டது இ்ஸ்ரோ … நிலவின் மேற்பரப்பு மேடும் பள்ளமுமாக இருப்பதாக படத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தகவல்

*காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரணை … அவசர வழக்காக விசாரிக்குமாறு தமிழக அரசு வைத்த கோரிக்கை எற்பு

*மணிப்பூர் மாநிலத்தில் உகருனி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளஞைர்கள் மூன்று பேர் மரணம் …கடந்த மே மாதம் மூன்றாம் தேதி ஆரம்பமான கலவரம் இன்னும் ஓயாதது குறித்து அனைத்து தரப்பும் கவலை.

*மீன்பிடித் தடைகாலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ ஐந்தாயிரத்தில் இருந்து எட்டாயிரமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை .. மாநிலம் முழுவதும் 45 ஆயிரம் மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு.

*கச்சத்தீவு மீட்கப்படும்,மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கன் என்று பாஜக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை .. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு.

*கடந்த 1974- ஆம் ஆண்டில் மத்திய அரசு கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததை கடுமையாக எதிர்த்தது அன்றைய திமுக அரசு.. கச்சத் தீவு தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் என்பதற்கான ஆதராங்களை கலைஞர் திரட்டிக் கொடுத்தும் பயனில்லாமல் போயிவிட்டது என்று ஸ்டாலின் விளக்கம்.

*அதிமுக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு … விதிகளின் மாற்றத்தை அங்கீகரித்தது எதிர் வரும் காலங்களில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டதுதான் என்று தேர்தல் ஆணையர் பதில்.

*மதுரையில் ஆகஸ்டு 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்குத் தடையில்லை..தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

*சென்னையில் இருந்து மதுரைக்கு அதிமுக மாநாட்டுக்காக சிறப்பு ரயில் இன்று இரவு புறப்படுகிறது .. முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட சிறப்பு ரயிலில் அதிமுக தொண்டர்கள் 1300 பேர் பயணம்.

*பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்டு உள்ள வழக்குக்கு தடை விதிக்கக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் .. வழக்கில் ஆன் லைன் மூலம் ஆஜராகுவதற்கு அனுமதிக்குமாறு எஸ்.வி.சேகர் வைத்த கோரிக்கையும் நிராகரிப்பு.

*அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 685 பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வது பிற்பகலில் தொடங்கியது .. ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்ய முயன்றதால் அரசு போக்குவரத்துக் கழக இணைய தளம் முடக்கம்.

*அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக சென்னையில் மண் எடுக்க முயன்ற பாஜகவினர் 50 பேர் கைது … இந்து சமய அறநிலையத் துறை தடையை மீறி வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் மண் எடுக்க வந்ததால் போலீஸ் நடவடிக்கை.

*நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட கோஸ்டல் எனர்ஜி இயக்குநர் அகமது புகாரிக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை … இரு தரப்பு வாதங்கள் ஜாமீன் உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என்று கூறி தடை விதித்தது உயர்நீதிமன்றம்.

*சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியது தெற்கு ரயில்வே .. புதிய புறநகர் ரயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதாக சென்று வருவதற்கு ரயில் நிலையம் அமைக்குமாறு பெருநகர வளர்ச்சிக் குழுமம் விடுத்த கோரிக்கை ஏற்பு.

*கோவில் பட்டியை அடுத்த லட்சுமிபுரத்தில் பதினோரம் வகுப்பு படிக்கும் பட்டியிலின மாணவன் வீட்டுக்குள் நுழைந்து மற்ற மாணவர்கள் தாக்குதல் .. கழுகுமலை போலிசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து மாணவர்களை பிடித்து விசாரணை.

*சென்னை நுங்கம்பாக்கத்தில் காய்கறி கடையில் கள்ள நோட்டுகளை கொடுத்து மாற்ற முயன்றதாக முன்னாள் ராணுவ வீரர், வழக்கறிஞர், அச்சக உரிமையாளர் ஆகியோர் கைது.. கள்ள நோட்டு தயாரிப்பதற்கான இயந்திரங்கள், காகித கட்டுகள் மற்றும் ரூ 45 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்.

*கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயிலில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு … முருகன் சிலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கு சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை.

*கொடைக்கானலில் குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கான பார்வையாளர் கட்டணம் அதிகரிப்பு .. பெரியவர்களுக்கு ரூ 30,சிறியவர்களுக்கு ரூ 20 என்று கட்டணம் வசூலிப்பு.

*கேரள அரசு 13 கிராமங்களில் கட்டுமான பணிக்கு தடைவிதித்து உள்ளதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு … தேனி மாவட்டத்தில் இருந்து செல்ல வேண்டிய தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்.

*கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்டு உள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் .. சி.பி.ஐ. தாக்கல் செய்து உள்ள மனு மீது 25 – ஆம் தேதி விசாரணை நடத்துகிறது உச்ச நீதிமன்றம்.

*மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்வது பற்றி கர்நாடக மாநில அரசு விரைவில் முடிவெடுக்கும் …துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தகவல்.

*மும்பை மீது கடந்த 2008- ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடர்புடைய தன்வீர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது என்ற முடிவுக்கு தடை விதிக்க அமெரிக்கா நீதிமன்றம் மறுப்பு.. பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த ராணா கனடா நாட்டு குடியுரிமைப் பெற்றவர்.

*இந்தியாவில் வேகமாக ஓடக்கூடிய பெண் என்ற பெருமைக்கு உரிய டட்டி சந்துக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடை .. ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கூறி நடவடிக்கை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *