*கச்சத்தீவு தொடர்பாக இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 ஒப்பந்தம் தடை செய்கிறது, இந்திய மீனவர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974இல் விளக்கம் தரப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் …. இந்திய மீனவர்கள் 6,184 பேரை இதுவரை இலங்கை அரசு கைது செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்ததும் பேட்டி.
*”கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு….”கச்சத்தீவு – புதிய தரவுகள் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரையை கிழித்துள்ளது” “ திமுகவும், காங்கிரசும் தங்கள் குடும்ப நலனை பற்றி மட்டுமே எண்ணுகின்றன” என்றும் புகார்.
*”தமிழக மீனவர்களை பாதுகாக்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”…பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான் என்று முகஸ்டாலின் அறிக்கை.
*தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?2. இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?…. திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
*கச்சத்தீவு விவகாரத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது ப. சிதம்பரம் கடும் விமர்சனம்…கச்சத்தீவு விவகாரத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் குட்டிக்கரணம் அடிப்பதும் 2015 ஆர்டிஐ கேள்விக்கு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என கூறிவிட்டு, இப்போது மாற்றி பேசுவது ஏன் என்றும் ப. சிதம்பரம் காட்டம்.
*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கச்சத்தீவு விவகாரத்தை பாஜக திட்டமிட்டு எழுப்புவதாக வலை தளங்களில் விமர்சனம்… கடந்த 10 வருடங்கள்ளாக கண்டு கொள்ளாத ஒன்றை இப்போது எழுப்புவது உள்நோக்கம் கொண்டது என்றும் வலைதளங்களில் பதில்.
*தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு….. காங்கிரஸிடம் இருந்து ₹1,700 கோடியை வசூலிக்க எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க மாட்டோம், தேர்தலின்போது எந்த கட்சிக்கும் பிரச்னை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் வருமான வரித்துறை தகவல்.
*அருணாசலப் பிரதேசத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட மேலும் 30 சீனா பெயர் சூட்டியது… 11 மாவட்டங்கள், மலைகள், ஏரிகள் போன்றவற்றுக்கு சீனா பெயர் சூட்டியதால் பரபரப்பு .
*மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை… பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதன் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதிக்க திட்டம்.
*சனாதன பேச்சு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனு மீதான விசாரணையை மே 6- ஆர் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்…. மனுவில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வாரம் அவகாசம்.
*செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை.
*தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு….ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதி வரை நீட்டித்தது தமிழக அரசு…நெல்லை மாவட்டம் நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலியாக, சந்துரு தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு.
*வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக் குறைவு… சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
*டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்-டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…. காவலில் எடுத்து நடத்திய விசாரணை முடிவடைந்ததை அடுத்து சிறையில் அடைப்பு.
*19 கிலோ எடை கொண்ட பொது பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்துள்ளது…..ரூ.1960-க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 1930 ஆக குறைந்தது…வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 818.50-க்கு விற்பனை
*நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்….கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நிறுத்தம்.
*நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் இன்றோ முதல் ஜீன் மாதம் இறுதி வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை என்று தோட்டக்கலை துறை அறிவிப்பு
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447