*ஒரே நாடு,ஒரே தேர்தல் என்ற கருத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசின் நடவடிக்கை ஆரம்பம் .. சாதக பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு.
*நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவாக முடிப்பது என்று மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் முடிவு … மக்களவைத் தேர்தலை ஒன்றாக சந்திக்கவும் திட்டம்.
*இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் உட்பட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு.. காங்கிரஸ் சார்பில் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு குழுவில் இடம்.
*நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவை இந்தியா கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும் என்று மும்பை கூட்டத்திற்கு பின் ராகுல் காந்தி பேட்டி .. இந்தியாவுக்கான இடங்களை சேர்த்து சீனா வரைபடம் வெளியிட்டு உள்ளது பிரதமர் மோடி பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்
*சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல் 1 விண்கலத்தை சென்னை அடுத்த ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை ஏவுவதற்கான கவுண்டவுனை தொடங்கியது இ்ஸ்ரோ .. பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொவைவில் உள்ள இலக்கை 127 நாட்களில் அடைந்து ஆய்வை தொடங்கும் ஆதித்யா எல் 1.
*நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி பவித்ரா முன் ஆஜராகி வாக்குமூலம் .. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றவிட்டதாக கூறிய புகார் குறித்து ஆதராங்களுடன் விளக்கம்.
*கடந்த 11 ஆண்டுகளாக விஜயலட்சுமி கூறி வரும் புகாரை இப்போது விரைவுப்படுத்துவது ஏன் என்று சீமான் கேள்வி .. நாடாளுமன்றத் தேர்தல் பணியை முடக்கும் திட்டமாக இருக்கலாம் என்று சந்தேகம்.
*அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக யாரேனும் வழக்குத் தொடர்ந்தால் தமது கருத்தையும் கேட்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்.
*கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் .. சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
*பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்வதற்கு அக்டோபர் முதல் தேதி முதல் தடை விதிக்க முடிவு … கருவறையை பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டதை அடுத்து நடவடிக்கை.
*கோயில்களின் வடக்கு வாசல்களை மூடி வைத்திருப்பது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி …ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டியவர்கள் கடைபிடித்த ஆகம விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்.
*கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தால் இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி புகார் … திறமையான அதிகாரிகளை பணியில் அமர்த்தி போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை.
*கோடநாடு கொலை .கொள்ளைக்குப் பிறகு விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்த வழக்கு .. எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறப்படுவதால சி.பி.சி.ஐ.டி.போலீஸ் அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு விசாரணை.
*சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்டு மாதத்தில் 86 லட்சம் பேர் பயணம் .. அதற்கு முந்தைய ஜுலையை விட மூன்று லட்சம் பேர் அதிகமாக பயணம் செய்துள்ளதாக மொட்ரோ நிர்வாகம் பதில்.
*கர்நாடகா மாநிலம் ஹசன் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலின் போது முறைகேடுகளில் ஈடுபட்ட புகார்களின் பேரில் தேவகவுடா பேரனும் மதச்சசார்ப்பற்ற ஜனதா தளத்ததைச் சேர்ந்தவருமான பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றது ரத்து .. கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு .
*ஜி- 20 மாநாடு நடைபெற உள்ளதை அடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு .. ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிப்பு, விமானங்கள் பறக்கும் பாதையையும் மாற்றி அமைக்க நடவடிக்கை.
*சீன அதிபர் ஜின் பிங் டெல்லி ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதி செய்யாததால் குழப்பம் நீடிப்பு.. கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து.
*ஜெயிலர் வெற்றி பெற்றதை அடுத்து ரஜினி காந்துக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் ஒன்றரை கோடி மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ காரை பரிசளித்தார் கலாநிதி மாறன்.. படத்துக்கு ஊதியமாக நூறு கோடி ரூபாயை ஒரே காசோலையாக வழங்கியும் சிறப்பிப்பு.