தலைப்புச் செய்திகள் (01-10-2023)

*நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால் மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படுவார்கள்.. காணொலி காட்சி மூலம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் எச்சரிக்கை.

*நாடாளுமன்றத் தொகுதி பார்வையாளர்கள் வாரம் ஒரு முறை தொகுதிக்குச் சென்று தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.. ஸ்டாலின் வலியுறுத்தல்.

*காவிரி பிரச்சினையில் தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறார் மு.க.ஸ்டாலின் .. எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

*வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ 1695-லிருந்து ரூ 1898 ஆக அதிகரிப்பு.. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமி்ல்லை.

*சென்னைக்கு வந்து செல்லும் வைகை, பாண்டியன்,பொதிகை உள்ளிட்ட ரயில்கள் புதிய அட்டவணைப் படி இயக்கம்.. மதுரையில் இருந்து வைகை காலை 7.10 மணிக்குப் பதில் 6.40 மணிக்குப் புறப்பட்டது.

*குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.. பேருந்து கவிழ்ந்தது ஏன் என்பது பற்றி விசாரணை.

*நீலகிரியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும்… பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு.

*தொடர் விடுமுறை காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களிலும் கூட்ட நெரிசல்… குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் பயணிகள் உற்சாகம்.

*புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் கட்டுங்கடங்காத கூட்டம் … நெரிசலை சமாளிக்க இலவச டோக்கனை ரத்து செய்தது தேவஸ்தானம்.

*பழனி முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை அமலுக்கு வந்தது … பக்தர்கள் போனை வைத்து விட்டு செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு.

*தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க, இன்று மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்…. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் சிறப்பு வசதிகளுடன் முகாம்.

*சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர் லா உஷா பேச்சுவார்த்தை… ஏற்கனவே 3 சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு பகுதி நேர ஆசிரியர் சங்கமும் இணைந்தனர்.

*ஆசிய போட்டிகள் – ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா… சரோவர் சிங், தமிழக வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் தங்கம் வென்று சாதனை.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் உடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம்…. மக்களவைத் தேர்தல் பணிகள் உள்ளிட்ட, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை.

*நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன்…..திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

*தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தடகள வீரர் அங்கீத் என்பவருடன் தூய்மை பணி மேற்கொண்ட பிரதமர் மோடி… உண்பதற்கும், உறங்குவதற்கும் போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை என பிரதமர் பேச்சு

*’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதற்கேற்ப தேர்தல் சமயத்தில் த.மா.காவின் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிப்போம்… திருச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு.

*ஆசிய போட்டிகள்: ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் அவினாஷ் சேபிள் தங்கம் வென்றார்…. இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் குண்டு எறிதல் போட்டியில் தங்கம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *