* தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆகிய இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி … உச்ச நீதி மன்ற உத்தரவுபடி பசுமைப் பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உத்தரவு.
* எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஐ.டி., சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்திய பாஜக அரசு இப்போது செல்போன் ஒட்டுக்கேட்பை கையில் எடுத்து உள்ளது.. பாஜக அரசுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் மிரட்டப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் கருத்து.
* மக்களாட்சி நீடிக்குமா, ஜனநாயகம் காப்பற்றப்படுமா என்ற அச்சம் நாட்டில் நிலவுகிறது … ஐந்து மாநில தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெரும் என்ற செய்தி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.
* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று நியாயவிலைக் கடைகள் செயல்படும் … அனைத்துப் பொருட்களையும் வழங்கவும் உணவுத் துறை உத்தரவு.
* தமிழ்நாட்டில் 2222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது … ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 2 ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்று அறிவிப்பு.
* சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 101 ரூபாய் அதிகரிப்பு .. ரூ 1,898 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ 1,999 ஆக உயர்ந்தது.
* மோட்டார் சைக்கிளை அதி வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் புழல் சிறையில் உள்ள டிடிஎப் வாசன் என்பவருக்கு ஜாமீன் … தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் கொடுத்தது உயர்நீதிமன்றம்.
* வன்னியர் சமூகத்திற்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கை.. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனை.
* தமிழ் நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் முற்றுகிறது .. மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு .
* சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர் போல பேசுகிறார் ஆளுநர் .. ஆனால் சுதந்திரப் போராட்டத் தியாகி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பதாக பொன்முடி புகார்.
* மதுரைக்கு நாளை வர உள்ள ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் .. மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவிப்பு.
* திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி அருகே சாலையோரத்தில் வனத்துறை பொருத்தி இருந்த காமிரா கம்பம் உடைந்து விழுந்து விபத்து .. கல்லூரி மாணவர் தினேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே இறப்பு.
* காவல் துறையில் பணியாற்றி வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜா செரீப் என்பவர், தமக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன் வழங்கவில்லை என்று வழக்கு … சிறுபான்மை சமூகத்தைத் சேர்ந்தவர் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட செரீப்க்கு 4 வாரத்தில் பணப்பலன்களை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
* சிறுபான்மையினர், இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது.. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப மன நிலையை மாற்றிக் கொள்ளுமாறு உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து.
* மதுரை ஆதினமாக நியமிக்க்கோரி நித்தியானந்தா தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் … மதுரை ஆதினம் தேசிக பரமாச்சாரியார் மற்றும் இந்து அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு.
* மரத்தா சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு … மும்பையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு, இட ஒதுக்கீடு கேட்டு ஜாரங் பட்டீல் என்பவர் மேற்கொண்டு உள்ள உண்ணா விரதத்தை கைவிடுமாறும் கோரிக்கை.
* கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கு … ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் 538 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை.
* அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய 13 சதவிகிதம் உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல் .. ஜிஎஸ்டி வசூலில் மராட்டியத்திற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு.
* அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்குவதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை … தேர்தல் பத்திரங்களை தயாராக வைத்திருங்கள் ஆய்வு நடத்துவோம் என்று நீதிபதிகள் கருத்து.
* கடந்த 2022 ஆம் ஆண்டில் நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடந்த நகரங்களில் 5,652 விபத்துக்கள் உடன் டெல்லி முதலிடம் … 3,452 விபத்துகள் உடன் சென்னை ஐந்தாவது இடம்.
* பெங்களூருவில் கடந்த சில நாட்களாக குடியிருப்புக்குள் புகுந்த அச்சுறுத்தி வந்த சிறுத்தை சுட்டுப்பிடிப்பு .. குண்டு காயம் அடைந்த சிறுத்தை பிடிப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த பரிதாபம்.
* காசாவுக்கு செல்லக் கூடிய ராபா பாதையை இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே போர் தொடங்கிய பிறகு முதள் முறையாக திறந்துவிட்டது எகிப்து … காசாவில் இருந்த காயம் அடைந்தவர்களும் வெளிநாட்டவர்களும் எகிப்துக்குள் அனுமதி.
* காசாவில் உள்ள ஜபாலிகயா என்ற முகாம் மீத இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி இப்ராகிம் பியரி என்பவர் மரணம் … அகதிகள் முகாமிகள் தங்கியிருந்த பாலத்தீனியர்கள் 100 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் .