*தமிழக வெற்றி கழகம் என்று தமது கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய் …. இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியி்ல்லை, தமிழ்நாட்டில் 2026- ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று விஜய் அறிவிப்பு.
*என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல, அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் …. ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு திரைப்படத்தை கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் விளக்கம்.
*திமுவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக, சென்னைக்கு பிப்ரவரி.13ஆம் தேதி வருகிறார் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…. மு.க.ஸ்டாலினுடன் நடைபெறும் சந்திப்பின் போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகலாம் என்று தகவல்.
*நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை திருமாவளவனுக்கு வழங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மனம் . .. கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது விசிக.
*திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தென் சென்னை தொகுதி மட்டும் ஒதுக்கப்படலாம் என்று தகவல் … கமலஹாசன் போட்டியிடக் கூடும் என்று எதிர்ப்பார்ப்பு.
*சென்னை, கோவை, திருச்சி, சிவகாசி, தென்காசி நகரங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை ….வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி ஆவணங்கள் பறிமுதல்.
*தடை செய்யப்ட்ட விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களிடம் நிதிபெறுவதாக வெளியான புகாரை அடுத்து நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்… தங்களை மிரட்டவே சோதனை நடத்தப்பட்டதாக சீமான் ஆவேசம்.
*சென்னையில் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 4 வழி மேம்பாலம் கட்டுப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம் … பாலத்தை 18 மாதங்களில் கட்டி முடிக்க மாநராட்சி திட்டம்.
*கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராக நல்லூரில் வெள்ளாற்றில் ரூ 92.5 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டும் தடுப்பணை கட்டும் பணி நடைபெறவில்லை … தடுப்பணையை கட்ட வலியுறுத்தி புவனகிரியி்ல் பிப்வரி 7- ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
*சென்னை – பெங்களூர் இடையே 200 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ஏற்ப 4தண்டவாளத்தின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை … திட்ட அறிக்கை மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்,என், சிங் தகவல்
*தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு… உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் உள்ள 1,933 காலியிடங்களுக்கு www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை விளக்கம்.
*தமிழ்நாட்டில் மணல் குவாரிகளிளில் நடத்தப்பட்ட சோதனைகளை அடுத்து ரூ 130 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் … அனைவர் மீதும் சட்டவிரோத பணப் பறிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்விளக்கம்.
*கடலூர் மாவட்டம்ட முருகன்குடி கிராம விஏஓ சம்பத்குமார் லஞ்சம் வாங்கிய போது கைது. மணிமொழி என்பவரிடம் முதியோர் உதவித்தொகை மற்றும் வாரிசு சான்றிதழ் பெற 4500 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு காவல் துறை நடவடிக்கை
*அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரனின் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு… ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தல். சோரனிடம் 5 நாள் விசாரணை நடத்த காவலில் எடுத்தது அமலாக்கத் துறை.
*ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி, பின்னர் வெளிநடப்பு… அமலாக்கத்துறை, சிபிஜ போன்ற அமைப்புகளை பாஜக அரசு தவறாக நடத்துவதாக புகார்.
*ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து புதிய முதலமைச்சராக சாம்பாய் சோரன் பதியேற்றார்; … ஒரு நாள் தாமதத்திற்கு பிறகு மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைப்பு.
*தென் இந்திய மாநிலங்களில் இருந்து பெறப்படும் நிதி வட இந்திய மாநிலங்களுக்கு கொடுக்கப்படுவது தொடருமானால் தென் இந்திய மாநிலங்கள் தனி நாடு கோர வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.கே. சுரேஷ் எம்.பி பேச்சு … நாட்டைப் பிரிப்பது குறித்து எந்த கட்சியை சேர்ந்தவர்கள் பேசினாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கார்கே கண்டனம்.. கர்நடாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் சகோதரர்தான் சுரேஷ்.
*இந்தி திரை உலகத்தின் பிரபல நடிகை பூணம் பாண்டே கார்ப்பப்பை புற்று நோய் காரணமா 32 வயதில் அகால மரணம்… சின்னச் சிறு வயதில் காலமானதால் அனைவரும் அதிர்ச்சி.
*2050-ம் ஆண்டுக்குள் புதிதாக 3.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்… புகையிலை, மது, உடல் பருமன் போன்றவை புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கும் -WHO எச்சரிக்கை.
*ஈரான் நாட்டில் செயல்படும் தீவிரவாதக் குழு ஒன்று கடந்த வாரம் ஜோர்டானில் அமெரிக்க ராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி மூன்று பேரை கொன் ற விவகாரம் …சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள ஈரான் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தமது படைகளுக்கு ஒப்புதல்.
*தமிழர்களுக்கு எதிராக 12 ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியட்டதாக கூறப்படும் தகவலுக்கு நடிகை தன்யா பாலகிருஷ்ணன் மறுப்பு …அப்படி ஒரு பதிவை தாம் வெளியிடவே இல்லை, கெட்ட வாய்ப்பாக என் பெயர் இதில் தொடர்புபடுத்தப்பட்டு விட்டது. தம் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் செயல் நடைபெற்றதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிக்கை.
*இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா 93 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவிப்பு… ரோகித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்த பரிதாபம் … ஜெய்ஸ்வால் அபராமாக ஆடி 179 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447