*சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து கொண்டு விண்ணில் சென்றது பிஎஸ்எல்வி சி 57ராக்கெட் … ஏவப்பட்ட ஒரு மணி நேரத்தில் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இ்ஸ்ரோ அறிவிப்பு.

*ஆதித்யா எல் 1 தொடர்ந்து 125 நாட்கள் பயணித்து ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடையும் .. ஒவ்வொரு நாளும் சுற்றுவட்டப் பாதையை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டம்.

*சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்கலம் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை பெற்றது இ்ந்தியா .. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து சாதனை.

*ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 ஏவப்படுவதை நேரில் பார்க்க பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வம்.. வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டு இருந்தவர்கள் உற்சாகம்.

*பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட ஆதித்யா, சூரிய ஒளி மூலம் தனக்கான எரி சக்தியை பெற்றுப் பயணம் .. சூரிய ஒளி தகடுகள் சிறப்பாக செயல்படுவதகா விஞ்ஞானிகள் தகவல்.

*சிங்கப்பூர் நாட்டின் 9-வது அதிபராக தமிழ் வம்சா வழியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்தினம் தேர்வு . .. பதிவானவற்றில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி.

*தமிழ் நாட்டில் பருவ மழை காலத்திற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .. மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு.

*இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசியதாக வழக்கு.. ஈரோடு நீதிமன்றம் சீமானுக்கு சம்மன்.

*சீமான் மீது பாலியல் புகார் கூறிய நடிகை விஜயலட்சிமியிடம் இரண்டாவது நாளாக போலீஸ் விசாரணை … போதிய ஆதாரங்களை கொடுத்திருப்பதாகவும் தகவல்.

*கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொலி.. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியைத் தாண்டியது.

*சந்திராயன் 3-ன் ரோவர் நிலவில் 100 மீட்டர் தொலைவை கடந்து பயணம்.. ஆய்வுகளை ரோவர் சிறப்பாக செய்துவருவதாகவும் இஸ்ரோ தகவல்..

*பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக செப்டம்பர் 6- ஆம் தேதி இந்தோனேசியா செல்கிறார் .. ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பயணம்.

*ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை முழுமையாக வரவேற்பதாக அண்ணாமலை பேட்டி…தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சனைகள் வருவதாகவும் கருத்து.

*ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு நடத்துவதற்கு ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு 8 உறுப்பினர்கள் அறிவிப்பு. . அமித்ஷா, ஆதிரஞ்சன் சவுத்ரி , குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் குழுவில் சேர்ப்பு.

*சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும் ..உச்சநீதிமன்றம் உத்தரவு.

*ராஜஸ்தானில் பிராதபார்க் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவை வைத்திருந்த பெண்ணை கணவரும் உறவினர்களும் நிர்வாணப்படுத்தி தெருவில் அடித்து இழுத்துச் சென்று கொடுமை ..அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

*தமிழ் திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி சென்னையில் காலமானார் …பிரபல இயக்குநர் சந்தான பாரதியின் சகோதரர்தன் ஆர்.எஸ். சிவாஜி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *