தலைப்புச் செய்திகள் (02-10-2023)

*சென்னையில் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதம் போராட்டம் 7- வது நாளாக நீடிப்பு.. ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி.

*அண்ணாமலை தலைமையில் சென்னையில் நாளை நடை பெற இருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து.. டெல்லி சென்று உள்ள அண்ணாமலை பாஜக முக்கிய தலைவர்கள் உடன் ஆலோசனை.

*அதிமுக கூட்டணி முறிவுக்குக் காரணம் என்பதால் அண்ணாமலை, பாஜக தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படலாம் என வதந்தி.. டெல்லி மேலிடம் ஓரிரு நாளில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்.

*ஆந்திராவில் கடப்பா, அனந்தப்பூர் உட்பட 60 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.. மக்கள் இயக்கங்களின் தலைவர்கள், மாவோயிஸ்டுகளுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் வீடுகளை குறிவைத்து நடவடிக்கை.

*மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு .. அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் விருது பகிர்ந்தளிப்பு.

*இஸ்ரோ விண்வெளித் திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா.. ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் தலா ரூ 25 லட்சம் பரிசளித்து கவுரவிப்பு.

*தேர்தல் வரும் போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவது திமுகவின் வழக்கம் .. மக்களை மயக்கி ஆட்சிக்கு வருவது திமுகவின் பழக்கம் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

*காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் கிராமசபை கூட்டங்கள் … காணொலி காாட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேச்சு.

*காந்தி பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள்,பொதுமக்கள் அஞ்சலி… நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் காந்திக்கு புகழாரம்.

*காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன.. டெல்லியில் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி கருத்து.

*பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டது நிதிஷ்குமார் அரசு .. பிற்படுத்தப் பட்டோர் 36 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 21 விழுக்காடு.

*ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 55.42 விநாடிகளில் இலக்கை கடந்து தமிழக வீராங்களை வித்யா ராம்ராஜ் சாதனை…கடந்த 1984 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் பி.டி. உஷா செய்திருந்த தேசிய சாதனையை சமன் செய்தார் வித்யா.

*காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகாவை கண்டித்து வரும் 6-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

*தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் மாற்றறம்… புதிய செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்.

*காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ம.பி-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்… மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *