*டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இன்று ஆஜராகுமாறு அனுப்பப்பட்டு இருந்த சம்மனை ஏற்று ஆஜராகவில்லை அரவிந்த் கெஜ்ரிவால்.. அரசியல் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதால் ரத்து செய்யுமாறு கடிதம்.
*நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது …திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
*அரசு பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் தேர்வுக்கான பயிற்சி … ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்க தொழிற் கல்வித் துறை உத்தரவு.
*தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் படித்த பின் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்ய வேண்டும் என்ற நடை முறை இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைப்பு … ஒப்பந்தத்தை மீறுவோர் செலத்த வேண்டிய தொகையும் ரூ40 லட்சத்திற்கு பதில் ரூ 20 லட்சம் கட்டினால் போதும் என்று சுகாதாரத் துறை அறிவிப்பு.
*சுதந்திரப் போரட்ட தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் முழு உருவச் சிலை.. சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பு.
*பெரம்பலூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அதிகாரிகளை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரிக்கை… அதிமுக சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் 8- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
*மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்ற ஆளுநர் ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கறுப்புக் கொடி.. சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பதைக் கண்டித்து போராட்டம்.
*சென்னையில் வீடுகட்டுவதற்கான அனுமதி கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிப்பு … கல்வி, வணிக நிறுவனங்கள்,தொழிற்சாலைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தி அரசு உத்தரவு.
*லியோ பட வெற்றி விழாவில் 2026 சட்ட சபை தேர்தல் பற்றிய கேள்விக்கு நடிகர் விஜய் “கப்பு முக்கியம் பிகிலு” என்று அளித்த பதில் அவர் அரசியலுக்கு வர இருப்பதை உணர்த்துவதாக கருத்து… வலை தளங்களில் விஜய் கருத்தை வரவேற்று ரசிகர்கள் கொண்டாட்டம்.
*அரசியல் கட்சி தொடங்குவதற்கு நடிகர் விஜய்க்கு கனவு இருப்பது என்றால் வரவேற்போம் … முதுகுக்கு பின்னால் தட்டிக் கொடுப்போம் என்றும் சீமான் கருத்து.
*திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது மாற்று சமூகத்தைச் சோந்தவர்கள் சிறு நீர் கழித்து, தாக்கி, பணம் பறித்தது மன்னிக்க முடியாத குற்றம் … இது போன்ற செயல்களை தமிழ் நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தல்.
*நெல்லை மாவட்டத்தில் நடந்த செயல் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒன்று .. பட்டியலின சமூக மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் விரைவாக விசாரித்து தண்டனை வழங்க டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.
*திருப்பூர், கோவை மாவட்டங்களில் நவம்பர் 5 ஆம் தேதி முதல் அனைத்து ஜவுளி தொழில் உற்பத்திகளும் நிறுத்தம் … நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வைக் கண்டித்து உற்பத்தியை நிறுத்துவதாக தமிழ்நாடு தொழில் தொழில் துறை கூட்டமைப்பு அறிவிப்பு.
*தமிழ்நாட்டைச் சேர்ந்த மதன் குமார் என்ற 2 ம் ஆண்டு மருத்துவ மாணவர் ஜார்கண்டில் உயிரிழப்பு .. ராஞ்சியில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் எரிந்த நிலையில் உடல் மீ்ட்பு.
*மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப்கான் ஓப்புதல் வழங்காததை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு …. ஆளுநரிடம் 8 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும் புகார்.
*சத்தீ்ஸ்கர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாரம் .. காங்கிரசும் வளர்ச்சியும் சேர்ந்து இருக்க முடியாது என்று விமர்சனம்.
*நாடாளுமன்றக் குழு திரினாமூல் காங்கிரஸ் எம்.பி. மொகூவா மொய்தியிடம் நடந்த விசாரணையின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு … விசாரணை என்ற பேரில் இழிவான கேள்விகள் கேட்கப்பட்டதாக புகார்.
*தென்காசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கன மழையால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு….. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிப்பு.
*கோபுர வாசலிலே, சுந்தர காண்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜுனியர் பாலையா மரணம்.. அதிகாலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர்பிரிந்தது.