தலைப்புச் செய்திகள்… (02-12- 2023)

*சென்னைக்கு தென் கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது… தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவிப்பு.

*கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும் … மீனவர்கள் மூன்று நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வேண்டுகோள்.

*மிக் ஜாம் என்று பெயரிடப்பட்டு உள்ள புயல் காரணமாக திங்கள் கிழமை சென்னை,செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .. புதுச்சேரி மாநில அரசும் விடுமுறை அறிவித்தது.

*தண்ணீர் தேங்காமல் இருக்க ரூ 4000 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டதாக கூறியது திமுக அரசு … ஆனால் ஒரு நாள் மழைக்கு சென்னை தண்ணீரில் தத்தளிப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார்.

*மத்தியப் பிரதேசம், சத்தீ்ஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கனாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை … காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருப்பதால் பதினோரு மணிக்கு முன்னணி நிலவரஙகள் தெரியவருவதற்கு வாய்ப்பு.

*தெலுங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை அனைத்து கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்து உள்ளன… ம.பி., மற்றும் ராஜஸ்தானில் சில கணிப்புகள் பாஜகவுக்கும் சில கணிப்புகள் காங்கிரசுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளதால் குழப்பம்.

*தேர்தலுக்குப் பிறகு இழுபறி ஏற்பட்டால் சமாளிக்க வெற்றி வாய்ப்பு உள்ள சுயேட்சைகளுடன் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை … தமது கட்சி எம்எல்ஏக்கள் அணி மாறுவதை தடுக்க தேவையானால் விடுதிகளில் தங்க வைக்கவும் நடவடிக்கை.

*தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சிக்கு பெருப்பான்மை கிடைக்காது என்பதால் சந்திரசேகரராவ் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசுகிறார்.. கர்நாடக துணை முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் பரபரப்பு தகவல்.

*தேர்தல் நடைபெற்ற மற்றொரு மாநிலமான மிசோரமில் நாளை நடைபெறவதாக இருந்த வாக்கு எண்ணிக்கை திங்கள் கிழமைக்கு தள்ளி வைப்பு .. தேர்தல் ஆணையம் கடைசி நேரத்தில் நடவடிக்கை.

*திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரெண்ட் சுரேஷ் பாபுவை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு … மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அதிகாரி வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய தீவிர சோதனை.

*மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு பாதுகாப்புப் பணிக்கு வந்த சி.ஆர்.பி.எஃப் படையினரை அனுமதிக்க தமிழ்நாடு காவல்துறையினர் மறுப்பு…. விசாரணையின் போது அங்கிட் திவாரி கொடுத்த தகவலின் பேரில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.

*அங்கிட் திவாரியின் லஞ்ச வேட்டையில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் .. சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தப்படலாம் என்ற தகவலின் பேரில் விடிய விடிய சிஆர்பிஎப் படை பாதுகாப்பு,

*திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற பழைய வழக்கு நிலுவையில் உள்ளது .. அந்த வழக்கை விசாரிக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி சுரேஷ்பாபுவிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சிக்கினார் அங்கிட் திவாரி.

*அதிகாரி அங்கிட் திவாரி மணல் குவாரிகளில் சோதனை நடத்தியவர் என்று முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தகவல் .. மணல் எடுப்பவர்களையும் மிரட்டி திவாரி பணம் வாங்கி உள்ளாரா என்பது பற்றி விசாரிக்கவும் முடிவு

*அங்கிட் திவாரியை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து மேலும் ஆதாரங்களைத் திரட்ட லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம் … நீதிமன்றத்தை நாடி காவலில் எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்

*அமலாக்கத் துறை நடுநிலையானது, நேர்மையானது என்ற தோற்றத்தை அங்கிட் திவாரி கைது சிதைத்து விட்டதாக வலைதளங்களில் விமர்சனம்.. எவ்வளவு பெரிய மோசடி செய்திருந்தாலும் லஞ்சம் கொடுத்து தப்பிக்கும் வழியை அங்கிட் அம்பலப்படுத்தி இருப்பதாகவும் கேலி.

*ஆதித்யா எல் 1 விண்கலத்தில் சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் (SWIS) என்ற கருவி செயல்பட தொடங்கி உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.. ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது எனவும் தகவல்.

*இஸ்ரேல் வான்வழியாக நடத்தும் தாக்குதலில் கடந்த இரண்டு நாட்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு … காசா முனையில் போர் நிறுத்த நாட்களில் நிலவிய அமைதி குலைந்து பதற்றம் அதிகரிப்பு.

*சர்வதேச செஸ் ரேட்டிங்கில் 2500 புள்ளிகளை கடந்து இந்திய அளவில் 3- வது பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார் தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி … கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது

*டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக தங்கள் சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று சாதனை… வங்கதேசத்தின் சைல்ஹெட் மைதானத்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி. தஜுல் இஸ்லாம் ஆட்ட நாயகனாக தேர்வு.

*மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீஸ் தடை விதிப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *