*சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் நாட்டின் முகாம்கள் மீது அமெரிக்கா ராணுவம் குண்டு வீசித்தாக்குதல் .. ராணுவ தளவாட மையங்கள், ட்ரோன் சேமிப்புக் கிடங்ககள் என 85 நிலைகள் தகர்ப்பு. வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல்.
*ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இரான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் என்ற அமைப்பு தாக்குதல் நடத்தி மூன்று அமெரிக்க வீரர்களை கொன்றதற்கு பதிலடி … புரட்சிகர காவலர்கள் அமைப்புக்கும் தங்கள் நாட்டுக்கும் தொடர்பு இல்லை என்று இரான் அளி்த்திருந்த விளக்கத்தை ஏற்காமல் அமெரிக்கா தாக்குதல்.
*அண்ணாவின் 55-வது நினைவு நாளையொட்டி சென்னையில் சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுக பேரணி – அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பு. ஐரோப்பா சென்றுள்ள மு.க.ஸ்டாலின் ஜெர்மனி நாட்டில் அண்ணா படத்துக்கு மரியாதை.
*அண்ணாவின் 55-வது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை… ஓ.பன்னீர் செல்வம் அண்ணா நினைவிடத்தில் திடீரென சசிகலா நடராஜனுடன் சந்திப்பு
*திமுகவில் தனக்குப் பின் தன் வாரிசுகள் வரவேண்டும் என்பதை விரும்பாத அண்ணாவை வணங்குவதாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு … தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது விலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தவர் அண்ணா என்றும் புகழாரம்.
*நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கிறது திமுக …. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல்கள் அனுப்புமாறு வேண்டுகோள்.
*புதுச்சேரியில் மாநில அரசைக் கண்டித்து பிப்ரவரி 10- ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடிபழினிசாமி அறிவிப்பு…. நியாய விலைக் கடைகளை திறக்கவில்லை, உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்று புதுவை அரசு மீது புகார்.
*தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரணம் தராததைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கருப்புச் சட்டையுடன் போராட்டம் .. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிவிப்பு.
*பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு பாரத ரத்னா விருதை அறிவித்தது மத்திய அரசு … பாரத ரத்னா விருது பெறும் அத்வானிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து.
*பஞ்சாப் மாநில அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஆளுநர் பன்வரி லால் புரோகித் ராஜினாமா … தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்பட்ட போதும் சர்ச்சைகளில் சிக்கியவர் பன்வரிலால்.
*இந்தி திரைப்பட நடிகை பூணம் பாண்டே இரண்டு தினங்கள் முன்பு புற்று நோயால் இறந்துவிட்டதாக வெளியான செய்திக்கு அவரே மறுப்பு… தாம் சாகவில்லை,உயிருடன் இருக்கிறேன் என்று பூணம் பாண்டே தந்துள்ள விளக்கத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி.
*மராட்டிய மாநிலத்தில் காவல் நிலையத்தில் பாஜக எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் தன்னுடன் மோதலில் ஈடுப்பட்ட சிவசேனா கட்சி நிர்வாகி மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கிச் சூடு … குண்டு காயம் அடைந்த மகேஷ் மருத்துவமனையில் அனுமதி.
*இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக முக்கியமான சாலைகள் அனைத்தும் மூடல் … மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகமும் பாதிப்பு
*இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி… அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவிப்பு. இங்கிலாந்தின் ஆண்டர்சன், பஷீர், ரெஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
*இந்தியாவை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டும் எடு்ப்பு …முதல் இன்னிங்சில் இந்திய அணி 146 ரன்கள் முன்னிலை.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447