*தமிழ்நாட்டைக் குறிவைத்து மேலும் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி… ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முடிவு.
*நான்கு நாள் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஏப்ரல் 9 -ஆம் தேதி காலை வேலூரில் வாகனப் பேரணி, மாலை தென்சென்னையில் வாகன பேரணியில் கலந்துக்கொள்வதாக பயணத் திட்டம் தயாரிப்பு … ஏப்ரல் 10- ஆம் தேதி நீலகிரியில் வாகனப் பேரணி, கோவையில் பொதுகூட்டம், ஏப்ரல் 13- ஆம் தேதி பெரம்பலூரிலும் ஏப்ரல் 14- ஆம்தேதி விருதுநகரிலும் பொதுக்கூட்டங்க்ளில் பங்கேற்கிறார் மோடி.
*தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ராகுல் காந்தி வரும் 11 அல்லது 12ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல். . முதற்கட்டமாக கோவை, கரூர் அல்லது நெல்லை, விருதுநகரில் பரப்புரையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்ப்பு.
*மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்துக்காக நாளை மதுரைக்கு வரவிருந்த பயணம் ரத்து …புதிய தேதி பின்னர் வெளியிடப்படும் என்றும் தகவல்.
*சென்னையில் அயனாவரம், சூளை மேடு ஆகிய இடங்களில் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை… வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை.
*மற்றக் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு தாவிய 25 பேரில் 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணை நிறுத்திவைப்பு, மேலும் மூன்று பேர் மீதான வழக்குகள் முடித்துவைப்பு … ஊழலை ஒழிப்போம் என்று கூறும் பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத்துறை,வருமான வரித்துறை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளத்தில் பதிவு.
*தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளதால் அதிமுக ஆதரவு அலை வீசுவதாக சேலம் மாவட்டம் வீரப்பம் பாளையத்தில் அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு … அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டதாகவும் புகார்.
*இந்தியா கூட்டணிதான் இந்தியாவை காப்பாற்றும் .. ஆரணியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
*சிதம்பரத்தில் புறவழிச் சாலையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காரில் பறக்கும் படையினர் சோதனை…. யியி்அமைச்சரின் காரை நிறுத்தி காரின் முன்புறம் பின்புறம் உள்ளிட்ட இடங்களில் பறக்கும் படை அலுவலர்கள் ஆய்வு.
*புரட்சிப் பாரதம் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி அறிவிப்பு …. அடுத்தத் தேர்தலில் சீட்டு கொடுப்பதாக அதிமுக நிர்வாகிகள் உறுதி அளித்த இருப்பதாக பேட்டி.
*தமிழ்நாட்டில் செயல்படுத்திய திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் இந்தியாவை உலகம் உற்று நோக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் பேச்சு … நாடு முழுவதும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள்.
*தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சி.இ.ஓ, மற்றும் டி.இ.ஓ. அலுவலகங்களை ஏப்ரர் .10-க்குள் காலிசெய்ய கல்வித்துறை உத்தரவு…பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 151 கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை.
*மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்க உயர்நீ திமன்ற மதுரைக்கிளை தடை …முறையாக முன் பதிவு செய்து பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும்….. பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது என்றும் ஆணை.
*மயிலாடுதுறை: கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.. சாலையில் சிறுத்தை சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ வெளியான நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள்.
*ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூன்று பேரும் இன்று காலை இலங்கை பயணம் .. திருச் சி முகாமில் தங்கியிருந்தவர்கள் சென்னைக்கு வந்து விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு புறப்பட்டனர்.
*வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு… சத்தியஞான சபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடவடிக்கை.
*சென்னை -நாகர் கோயில் இடையே வியாழக் கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீடிப்பு …. தினசரி சென்னை எழும்பூரில் இருந்த காலை 5.15 மணி்க்கும் நாகர் கோயிலில் இருந்து மதியம் 2.50 க்கும் புறப்படும்.
*மாநிலங்களவையில் 49 உறுப்பினர்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு; மேலும் 5 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெற்றது.. மாநிலங்களவை உறுப்பினராக 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஓய்வுப் பெற்றார்.
*கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பேரணியாகச் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார் ராகுல் காந்தி … வயநாடு மக்களின் அசைக்க முடியாத ஆ தரவுக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக பேட்டி.
*மாண்டியா தொகுதி எ ம்.பி.யும் நடிகையுமான சுமலதா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதில்லை என்றும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அறிவிப்பு … மாண்டியா தொகுதியை மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கியதால் பாஜக ஆதரவுடன் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காததால் குழப்பத்தில் இருந்தார் சுமலதா.
*மதுபான ஊழல் வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நலத்துடன் இருப்பதாக சிறை அதிகாரிகள் தகவல் .. மதியம் மற்றும் இரவு உணவு வீட்டில் இருந்து வழங்கப்படுவதாகவும் தேவைப்பட்டால் சிகிச்கை அளிக்க மருத்துவர்கள் தயாராக இருப்பதாகவும் விளக்கம்.
*கடந்த 2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் …கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த விஜேந்தர் இப்போது பாஜகவுக்கு தாவல்.
*தெலுங்கானா மாநிலத்தில் சங்கா ரெட்டி மாவட்டத்தில் ரசாயண ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் இறப்பு …ஆலையில் சிக்கி உள்ள பத்து பேரை மீட்க நடவடிக்கை.
*தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதம். … 4 பேர் இறப்பு …தைவான் தலைநகர் தைபே, ஹூவாலியன் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை.
*கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு .. ஏப்ரல் 30- ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447