*நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி உறங்க வைக்கப்பட்டது. நிலவின் அடுத்த சூரிய உதயத்தில் (செப்- 22) ரோவர் விழித்து எழுந்து பணிகளை தொடரும் என இஸ்ரோ நம்பிக்கை. மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என அறிவிப்பு.

*ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் சுற்று வட்டப் பாதையின் உயரத்தை வெற்றிகரமாக அதிகரித்து உள்ளதாக இ்ஸ்ரோ அறிவிப்பு . விணகலம் சிறப்பாக செயல்பட்டுவருவதாகக் கூறி மகிழ்ச்சி…

*ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அமலானால் இன்னும் இரண்டு ஆண்டு பாக்கி உள்ள திமுக ஆட்சியை கலைத்துவிடுவார்களா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி.. ஒரே தேர்தலுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக இப்போது ஆதரவு தெரிவிப்பது பற்றி விளக்கம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தல்.

*அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15,16,17 ஆகிய தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம்… மதுரை மாநாட்டின் தீர்மானங்களை கூட்டத்தில் விளக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

*அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பா் 15- ஆம் தேதி நடைபெற உள்ள விநாடி- வினாப் போட்டிகளுக்கு தயாராகுங்கள் .. மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

*கொள்ளிடம் ஆற்றில் மேலும் 10 இடங்களில் மணல் குவாரி தொடங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தல் … 87 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆற்றுக்குள் அடுத்தடுத்து குவாரிகளை திறப்பது கொள்ளிடத்தை சீரழிக்கும் செயலாகிவிடும் என்றும் கருத்து.

*நடிகை விஜயலட்சுமி, தான் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறும் புகார்களுக்கான ஆதாரத்தை வெளியிடுமாறு சீமான் வலியுறுத்தல் … கைது செய்யப்படப் போவதாக பரவும் தகவலைக் கண்டு குடும்பத்தினர் பயப்படவில்லை என்று பேட்டி.

*நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்படும்தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் தலைவர் வீர லட்சுமி ஆகிய இருவர் மீதும் மேலும் சில ஊர்களில் போலீசில் புகார் .. இரண்டு பேரும் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தல்.

*சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியதற்கு அண்ணாமலை கண்டனம் …தமிழ்நாடு கோயிலகளும் ஆன்மீகச் சிந்தனையும் கொண்ட மாநிலம் என்றும் பேட்டி.

*நாட்டில் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது இந்து தர்மத்திற்கு எதிரானது .. ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு.

*ஊழல்,வகுப்பு வாதம் , சாதி ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை என்று பிரதமர் மோடி கருத்து .. 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடகா மாறும் என்றும் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி.

* நாடளுமன்ற சிறப்புப் கூட்டம் நடைபெற உள்ளதன் எதிரொலி.. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத்தலைவர்களுடன் ஐந்தாம் தேதி ஆலாசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கே முடிவு

*காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு .. டெல்லி மருத்துவமனையில் அனுமதி.

*மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவில் இணையப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவிப்பு… மிக்பெரிய சந்தேகங்கள் கொண்ட நடைமுறையை அமல்படுத்தும் முயற்சிக்கு துணை போக விரும்பவில்லை என்று விளக்கம்.

*ஜி-20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு செப்டம்பர்- 8 ஆம் தேதி முதல் 200 ரயில்கள் டெல்லிக்குள் வருவதற்கு தடை விதிப்பு.. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரயில்களை வேறு நிலையங்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடு.

*நோபல் பரிசளிப்பு விழாவுக்கு ரஷ்யா மற்றும் ஈரான்,பெலாரஸ் தூதர்களை அழைப்பதில்லை என்று அறிவிப்பு .. உக்ரைன் போரை அடுத்து மற்ற நாடுகள் கொடுத்த நிர்பந்தம் காரணமாக அழைக்காமல் இருக்க முடிவு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *