*பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ. வேலு மற்றும் பிரபல பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரிச் சோதனை .. சென்னை, திருவண்ணாமலையில் 40 இடங்களில் விசாரணை.
*திருவண்ணாமலையில் ஏ.வ.வேலுவின் அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சோதனையால் பரபரப்பு..வேலுவின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளிலும் சோதனை.
*வருமானவரித் துறை சோதனை நடத்த இருக்கும் செய்தி முன் கூட்டியே கசிந்துவிட்டதாக தகவல் … தகவலை கசியவிட்டவர் யார் என்று தெரியாமல் அதிகாரிகள் அதிர்ச்சி.
*கோவையில் திமுக பெண் பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமானவரிச் சோதனை . . விழுப்புரத்தில் வேலுவின் நண்பர் பிரேம் குமார் என்பவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் விசாரணை.
*அமைச்சர் ஏ.வ.வேலு வீட்டில் முன் கூட்டியே வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டு இருக்க வேண்டும் … எந்த திறமையுயம் இல்லாத வேலு அரசியல்வாதியாகா மாறி சொத்து சேர்ப்பதாக அண்ணாமலை புகார்.
*சென்னையில் காசா கிராண்ட் மறறும் அப்பாசாமி கட்டுமான நிறுவனங்களில் அதிகாலையில் சோதனை ஆரம்பம் … நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளவர்களின் விவரங்களை சேகரிக்க நடவடிக்கை.
*தமிழ்நாட்டிற்கு நவம்பர் 23 ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறந்தது விடவேண்டும்… கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.
*சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரை துணை ராணுவ உதவியுடன் ஒட வைக்கவா ? …நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
*மேட்டுப்பாளையத்தில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களை தாக்கிய திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் … தாக்கியவர்களை கைது செய்யாமல் அவர்களை பார்வையிடச் சென்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி புகார்.
*சென்னை அம்பத்தூரில் போதைக்காக இருமல் மருந்த விற்றவர் கைது .. மருத்துவர் பரிந்துறை இல்லாமல் விற்பதற்காக வைத்திருந்த மருந்துப் பாட்டில்களும் பறிமுதல்.
*தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாளில் தம்பதிகள் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை கைது .. தலைமறைவாக உள்ள உறவினர்கள் இரண்டு பேரை கைது செய்யவும் நடவடிக்கை.
*நாமக்கல் மாவட்டம் மோகனூர் போலீசால் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ராசாமணி கைது … பாசன சங்கத்தில் இருந்த தேக்கு மரத்தை வெட்டிய புகாரின் பேரில் நடவடிக்கை.
*தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? … தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*தீபாவளி போனஸ் 20 சதவிகிதம் வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் .. டாஸ்மாக் பணியாளர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் முத்துசாமி உறுதி.
*சென்னை கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் பதவி விலகல் … அமைப்பின் ஆசிரியர்கள் சிலர் மீது சில மாதங்கள் முன்பு பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து ரேவதி பதவி விலகியிருக்கலாம் என்று தகவல்.
*ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு … ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளதால் உச்சநீதிமன்றம் தலையிடுமாறு வலியுறுத்தல்.
*தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளதால் சாலைகளில் மேகமூட்டம் சூழ்ந்தது போல காட்சி .. பள்ளகளுக்கு விடுமுறை அறிவிப்பு. தேவையற்ற கட்டிட வேலைகளை நிறுத்துமாறும் அறிவுறுத்தல்.
*காற்று மாசு அதிகரிப்பால் டெல்லியில் அடுத்த 15 நாட்களுக்கு நிலைமை மோசமாக இருக்கும் என்று மாநில சுற்றுச் சூழல் அமைச்சர் கோபால் ராய் தகவல் .. மாசைக் கட்டுப்படுத்துவதுக் குறித்து நிபுணர்கள் உடன் ஆலோசனை.
*நாட்டில் வேலையின்மை பத்து சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே புகார்.. அனைத்து தரப்பு இளைஞர்களும் மோடி அரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் விமர்சனம்.
*தெலுங்கான சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க உள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.டி.பி. கட்சித் தலைவர் சர்மிளா அறிவிப்பு … தமது கட்சித் தேர்தலில் போட்டியிடாது என்றும் விளக்கம்.
*திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவம்பர் 23 ஆம் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும் … ரூ 300 விலை உள்ள டிக்கெட்டுகளை 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விற்க உள்ளதாக தகவல்.
*அமெரிக்க வெளயுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்குப் பயணம் .. காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக வைத்து உள்ளவர்களை மீட்பது பற்றி ஆலோசிக்கலாம் என்று எதிர்பார்ப்பு.
*தமிழ்நாட்டில் நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுத்தது வானிலை மையம் .. மாவட்ட நிர்வாகம் உரிய முன்னேற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தல்.
*காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 10 சென்டிமீட்டர் மழை .. நவம்பர் 6- ஆம் தேதி கன மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவிப்பு.
*தாய்லாந்து நாட்டில் தளபதி 68 என்ற படத்தின் படபிடிப்பு .. நடிகர் விஜய் பாங்காங்கு பயணம்.