*வங்கக் கடலில் வட மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.. தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தகவல்.

*நிலவின் மேற்பரப்பில் அமைதியாக நின்று கொண்டிருந்த விக்ரம் லேண்டர் 40 சென்டி மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று கொஞ்சம் தொலைவு தள்ளி தரையிறங்கியது .. பெங்களூர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நடத்திய சோதனை வெற்றிகரமாக இருந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

*முதற்கட்ட ஆய்வுகள் நிலவில் முடிவடைந்ததால் விக்ரம் லேண்டரையும் உறக்க நிலைக்கு கொண்டு செல்ல இஸ்ரோ திட்டம் .. சூரிய சக்தி தீர்ந்து எரிபொருள் குறைந்ததும் ரோவர் அருகிலேயே லேண்டரையும் நிறுத்தி வைக்க நடவடிக்கை.

*அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றந்தான் விசாரிக்க வேண்டும் .. வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

*சட்ட விரோதப் பணப்பறிமாற்ற வழக்குகளை முதன்மை அமர்வு நீதிமன்றந்தான் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் விளக்கம் ..சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள செந்தில் பாலாஜி கோப்புகளை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவு.

*தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் 3 – வது சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகும் 50 ஆயிரம் இடங்கள் காலி .. 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.

*ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவான மாணவர்களே 263 பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்து உள்ளனர்.. 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர் சேர்க்கை நடந்து உள்ளதாக அறிவிப்பு.

*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்” என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலினின் முதல் வீடீயோ உரை தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியீடு … இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை பாஜக அரசு சிதைத்து வருவதாக புகார்.

*திருப்பூர் மாவட்டத்தில் வீட்டின் முன் மது அருந்தியதை தட்டிக் கேட்டதற்காக நான்கு பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் செல்லமுத்து என்பவரை பிடித்து போலீ்ஸ் விசாரணை ..மேலும் இரண்டு பேரை தேடி வருவதாக போலீஸ் தகவல்,

*நான்கு பேரை கொன்றவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.. அசம்பாவிதங்களை தவிர்க்க ஐந்து மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் குவிப்பு.

*பல்லடம் அருகே நான்கு பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கருத்து .. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

*திமுகவின் சாராய வியாபாரிகள் பணத்தாசையில் இன்னும் எத்தனைப் பேரைதான் கொன்று குவிப்பார்கள் என்று அண்ணாமலை கேள்வி …காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதாகவும் புகார்.

*விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மது விலக்குச் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தலைமைக் காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் … சோதனையில் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை மதுவிலக்கு அமல் துறையில் ஒப்படைக்கவில்லை என்று புகார்.

*சென்னையில் செப்டம்பர் 16- ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் .. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றி விவாதிக்க முடிவு.

*திமுகவை ஆதரிப்பதாக சீமான் சொன்ன பித்தலாட்டத்தை நம்ப வேண்டாம் என்று நடிகை விஜயலட்சுமி கருத்து .. தான் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை காண்பதற்கு காத்திருப்பதாகவும் பேட்டி

*பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்கள் வழிப்படக்கூடாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து கோயில் முன் பதாகை வைப்பு .. பதாகை வைக்கும் தற்காலிக உத்தரவுக்கு எதிராக அறநிலையத் துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு.

*சனாதனத்தை ஒழிக்க வேண்டு்ம் என்று சொன்ன கருத்தில் உறுதியுடன் இருப்பதாக உதயநிதி அறிவிப்பு ..வழக்குகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் பேட்டி.

*சனாதனம் தொடர்பாக உதயநிதி சொன்ன கருத்துக்கு சோனியா மற்றும் ராகுல் காந்தி பதில் சொல்லாமல் மவுனமாக இருப்பது ஏன் ? மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி.

*சனாதனம் பற்றிய உதயநிதி கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபல் பதில்..கருத்துச் சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு, ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் காங்கிரஸ் மதிப்பதாக விளக்கம்.

*இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை வர்ணனை செய்து வந்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் எனப்படும் வளர்மதி காலமானார் .. கடந்த 6 ஆண்டுகளாக பல முக்கிய ராக்கெட்டு ஏவுதல் நிகழ்ச்சிகளை வர்ணனை செய்து வந்தவர் வளர்மதி.

*டெல்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில சீன அதிபர் ஜின் பிங் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு ..ஜின் பிங்குக்குப் பதில் பிரதமர் லீ க்யாங் டெல்லி வரவுள்ளதாகவும் சீனா விளக்கம்.

*மேற்கு ஆப்பிரிக்க நாடான கோபானில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ தளபதி பிரிக் நுகுமா தற்காலிக அதிபராக பதவி ஏற்பு …. தேர்தல் மூலம் இரண்டாவது முறை அதிபர் பதவிக்கு வந்த அலி போங்கே வீட்டுக் காவலில் அடைப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *