தலைப்புச் செயதிகள் .. ( 04-11-2023)

*பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை தொடருகிறது… நேற்று காலை தொடங்கிய சோதனை இரண்டாவது நாளும் நீடித்தது.

*திருவண்ணாமலையில் அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் வீடுகளில் உள்ள ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளால் ஆய்வு .. கணக்கில் காட்டப்படாத சொத்து விவரங்கள், சோதனையின் முடிவில் வெளியிடப்படலாம் என்று தகவல்.

*கோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரிச் சோதனை தொடர்ந்தது .. சென்னையில் காசா கிராண்ட் நிர்வாகி செந்தில் குமார் வீட்டிலும் சோதனை நீடித்தது.

*சென்னை அபிராமி திரை அரங்க உரிமையாளர் ராமநாதனை அவருடைய அலுவலகத்திற்கு வரவழைத் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை .. புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்கை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டுவதற்கான பணம் பற்றி கேள்வி.

*தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு… சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்.

*நேபாள நாட்டில் நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஐ தாண்டியது .. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடருகிறது.

*நேபாளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு … ஜஜர்கேட் மற்றும் ருக்கும் மாவட்டங்களில் ஏராளமான வீடுகள், கட்டிடஙகள் இடிந்து சேதம்.

*கடந்த ஒரு மாதத்தில் நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும் … பிரதமர் புஷ்ப கமல் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு.

*நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் சுற்றுப்புரங்களிலும் அதிர்வு.. நள்ளிரவில் விடுகள் குலுங்கியாதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

*நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவர்கள் நால்வர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … ஜிபிஎஸ் கருவி, டார்ச் லைட் உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல். ய

*தமிழ் நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் நீக்குவதற்குமான இரண்டு நாள் முகாம் ஆரம்பம் .. சிறப்பு முகாம்களை அணுகி பொதுமக்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்.

*சென்னையில் வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு அமலுக்கு வந்தது .. மணிக்கு ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்திலும் இரு சக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்திற்கு மேலும் சென்றால் அபராதம் விதிப்பு.

*திருச்சியில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் சிட்டிக்கு நேரடி விமான சேவை தொடங்கியது .. இரு தடத்திலும் வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்குகிறது வியாஜெட் நிறுவனம்.

*சென்னை குன்றத்தூரில் பள்ளி மாணவர்களை தாக்கியது, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை ஆபாசமாக பேசிய வழக்கில் பாஜக பிரமுகரும் துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது …அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து புகார்களின் பேரில் வழக்குப் பதிவு.

*ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஜேசு என்ற குற்றவாளியை பிடிககச் சென்ற போலீஸ்காரர்கள் மூனறு பேருக்கு அரிவாள் வெட்டு .. பலத்த காயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதி.

*சென்னை அடுத்த பனையூரில் பொதுச் சொத்தை சேதப்படு்திய வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு தள்ளுபடி … புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவரின் மனுவை தள்ளுபடி செய்து செங்கற்பட்டு நீதிமன்றம் உத்தரவு.

*தூத்துக்குடியில் திருமணம் செய்த மூன்றாவது நாளில் காதல் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் இருவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் … ஏற்கனவே பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது.

*பட்டதாரி ஆசிரியர்கள் 2222 பேர் நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு … தேர்வு எழுதிய 400 பேர் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை.

*தீபாவளியை முன்னிட்டு ஆன் லைன் மூலம் பட்டாசு வாங்குவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் கிரைம் போலீ்ஸ் வேண்டுகோள்… போலிபட்டாசுகளை அனுப்பி ஏமாற்றுவதாக புகார்.

*டெல்லி மற்றும் புறநகரில் காற்று மாசால் ஏற்பட்ட புகை மூட்டம் போன்ற நிலை நீடிக்கிறது .. மாசு அடைந்த காற்றை சுவாசிப்பதால் பொதுமக்களுக்கு உடல் நிலை பாதிக்கப்படும் சூழல்.

*டெல்லியில் நடை பெற இருந்த மண்டல அளவிலான போட்டிகள் காற்று மாசு காரணமாக தள்ளிவைப்பு … பள்ளிகளும் மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.

*சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு மகாதேவ் என்ற விளம்பர நிறுவனம் ரூ 508 கோடி ஹவாலா பணம் அனுப்பி உள்ளதாக அமலாக்கத் துறை வெளியிட்ட தகவலுக்கு மறுப்பு .. காங்கிரசின் செல்வாக்கை குலைக்க அமலாக்கத்துறை மூலம் அவதூறு பரப்பப்படுவதாக முதல்வர் பாகல் பதில்.

*காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் மாநிலத்தில் ஹவாலா பணத்தின் துணையுடன் தேர்தலை சந்திப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி புகார்… இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிம் தாஸ் என்பவரிடம் கைப்பற்றப்பட்ட ரூ 5 கோடியும் காங்கிரசுக்கு வந்ததுதான் என்று விமர்சனம்.

*ஹமாசிடம் பிணைக் கைதிகளாக உள்ள 200க்கும் அதிகமானவர்களை மீட்கும் வரை போர் நிறுத்தம் செய்ய முடியாது .. அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தது இ்ஸ்ரேல்.

*அக்டோபர் முதல் தேதி முதல் இதுவரை 34 சதவிகிதம் பருவ மழை குறைவு … சென்னை வானிலை மையம் தகவல்.

*தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.. கன மழை பெய்யும் என்ற அச்சத்தால் மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கை.

*சென்னையில் இரவில் பெய்த மழையால் காலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் … பகலில் மழை ஓய்ந்திருந்ததால் பிற்பகலில் இயல்பு நிலை திரும்பியிருந்தது,

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *