*ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 எம்.எல்.ஏ.க்களில் சம்பாய் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 47 வாக்குகளை பெற்று வெற்றி … முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து சம்பாய் சோரன் கடந்த வாரம் முதல்வராக பதவியேற்பு.
*ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நீதிமன்ற அனுமதியுடன் வெளியில் வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பு… தமது கைதுக்கு ஆளுநர் மாளிகை காரணம் என்று சட்டசபையில் புகார்.
*ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரத்தில் காலை நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், படம் எடுத்து வலைதளத்தில் வெளியீடு … விடியல் கனவுகள், மேட்ரிட் நகரத்தில் சூரிய உதயம் என்று பதிவு.
*ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் தங்களால் முடிந்த உதவிகளை தமிழ்நாட்டுட்டுக்கு செய்யுமாறு மாட்ரீட் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் வேண்டுகோள் … வெளிநாட்டுப் பயணம் முடிந்து நாளை மறுதினம் சென்னை திரும்பும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக ஏற்பாடு.
*முடித்துவைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு எதிராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…. தாமாக முன்வந்து வழக்கினை விசாரிப்பதற்கான நடைமுறைகளை தனி நீதிபதி பின்பற்றவில்லை என்று மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்க்வி வாதம்.
*கஞ்சா போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் படி இந்தியாவிலேயே முதன்முறையாக 39 காவல்துறை அதிகாரிகளை நியமனம் செய்து உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் … தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு.
*கணவர் விஜயகாந்த் உருவத்தை வலது கையில் வரைந்தார் பிரேமலதா … வலை தளங்களில் பதியப்பட்ட படம் வரைலானது.
*தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று கனிமொழி பேட்டி… திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களிடம் கருத்து கேட்டு விரைவில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தரப்படும் என்றும் பதில்.
*குடிநீர் வழங்கல் துறை சார்பில் 11.98 கோடி மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… ரூ.152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல்.
*மின்வாரிய களப்பணிகளைக் கண்காணிப்பதற்காக செயலி (FSM) வடிவமைப்பு… மின் இணைப்பை துண்டித்தல், இணைப்பு வழங்குதல், புதிய இணைப்பு ஆகியவை பற்றி செயலி மூலம் அறிந்து கொள்வதற்கு ஏற்பாடு.
*சென்னையில் செம்மொழி பூங்காவில் பிப்ரவரி 10 – ஆம் தேதி முதல் மலர்க்கண்காட்சி … கிருட்டிணகிரி, கொடைக்கானல், மதுரை போன்ற இடங்களில் இருந்து 10 லட்சம் மலர்களை கொண்டு வர திட்டம்.
*சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு இரண்டு இளைஞர்கள் நடனம் ஆடி,வீடியோவை வலைதளங்களில் பதிந்ததால் சர்ச்சை … கண்டனம் வலுத்ததை அடுத்து இருவரும் மன்னிப்பு கேட்டு வீடீயோ வெளியயீடு.
*சண்டிகர் மநகராட்சி மேயர் தேர்தலை நடத்திய அதிகாரி வெளிப்படையாக தில்லுமுல்லு செய்தது தெரிகிறது…. மேயர் தேர்தல் நடத்தப்பட்ட அனைத்து வீடியோ பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டம் நடத்தக் கூடாது என்றும் தலைமை நீதிபதி உத்தரவு.
*வாக்குச்சீட்டில் திருத்தங்கள் செய்து 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து சண்டிகர் பாஜக மேயர் வேட்பாளரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தற்கு எதிராக வழக்கு … ஆம் ஆத்மி -காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்தும் தேர்தலில் தோற்றதாக அறிவிக்கப்பட்டதால் சார்ச்சை.
*இனிவரும் காலத்தில், நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் அமரும் நிலை ஏற்படும் …. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கும்போது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
*குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் தேவை எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரியவில்லை…. காங்கிரஸின் செயல்பாடுகள் காங்கிரஸுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு என்றும் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
*கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு, அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இந்த முறை வயநாட்டில் மட்டும் போட்டியிட உள்ளதாக தகவல்… அமேதியில் தோற்ற ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார்.
*நீட் உள்ளிட்ட தேர்வுகளி்ல்ஆள் மாறாட்டம் செய்கிறவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்க புதிய சட்டம் … நாடாளுமன்றத்தில் தாக்கல்.
*சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது அறிவிப்பு … எட்டு பாடல்களுடன் திஸ் மொமெண்ட் இசை ஆல்பதை கடந்த ஆண்டு வெளியிட்டு இருந்தது சக்தி இசைக் குழு.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் வழங்கப்படும் கிராமி விருது இசைக்கான உயரிய விருதாக கருதப்படுகிறது.
*இங்கிலாந்துக்கு எதிரான 2- வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி … 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447