*நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு … டெல்லியில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்பு.
*பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை. நூறு நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ 400 ஆக அதிகரிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதி … ஒரே நாடு,ஒரே தேர்தல் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படும் என்றும் அறிவிப்பு.
*அனைத்துத் துறைகளிலும் SC , ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். SC , ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்… நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம் என்பதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.
*கட்சித் தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் என்றும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி.. கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும் என்றும் விளக்கம்.
*பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்… பாஜகவில் சேர்ந்து குற்றவழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள். பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்பதும் காங்கிரஸ் தமது அறிக்கையில் அறிவிப்பு.
*இடஒதுக்கீட்டுக்கும் சமூக நீதிக்கும் எதிரான கட்சியான பாஜகவை வீழ்த்தாவிட்டால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்படும்… விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
*கொங்குமண்டலம் செழிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட அத்திக் கடவு-அவினாசி திட்டத்தை திமுக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை.. .அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிருக்கு 1000 ரூ பாய் வழங்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியது என்றும் ஈரோடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
*காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து இருப்பது தேர்தல் நாடகம் என்று சீமான் விமர்சனம் .. நீட் தேர்வால் ஏற்பட்ட உயிழப்புகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்று கேள்வி.
*திருநெல்வேலியில் பிரபல ஒப்பந்தத்தாரரான ஆர்.எஸ்.முருகனின் வீடு,அலுவலகம் உட்பட பத்து இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. .வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இருப்பு வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நடவடிக்கை.
*நடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல்19- ஆம் தேதிக்கு மறுநாட்கள் சனி , ஞாயிறு என்பதால் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை .. வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து 7 ஆயிரம் சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு
*மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் ஒன்பது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு …ஆங்காங்கு நவீன கேமிராவை பொருத்தி வனத்துறை மற்றும் காவல் துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பு
*போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என்று மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் கேள்வி… சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று போதைப் பொருள் பிரிவு அளித்த விளக்கத்தை அடுத்து வழக்கு முடித்துவைப்பு.
*தமிழகத்தில் 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல்.15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை… ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.
*ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து … மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களை நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்க அமலாக்க துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.
*வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (6.5%) மாற்றமில்லை. ரிசர்வ் வங்கி முடிவால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் பழைய நிலையிலேயே நீடிக்கிறது… பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் விளக்கம்.
*கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இனி அதுப்ற்றி பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தம் பேட்டி .. கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்கினால் இலங்கையின் கடல்வளம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கருத்து.
*பாகிஸ்தானில் மறைந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுவரும் பயங்கரவாதிகளை… இந்திய உளவுத்துறை குறிவைத்து கொண்று வருதாக லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் நாளேடு வெளியிட்ட செய்தியால் பரபரப்பு … பிற நாடுகளில் புகுந்து கொலை செய்வது இந்தியாவின் நோக்கம் அல்ல என்று இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு.
*நாட்டின் பல மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை … வெப்ப சலனத்தால் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தகவல்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447