*இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்…குடியரசுத் தலைவரின் சார்பில் G-20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath என குறிப்பிட்டு உள்ளதை அடுத்து சர்ச்சை.
*இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு தொடங்கி விட்டதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் .. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிறைவேறியவுடன் நாட்டின் பெயரும் மாற்றப்படலாம் என்று கருத்து.
*நாட்டின் பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கு எதிப்புத் தெரிவிக்க முடியாது என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கருத்து … அரசியல் சாசனத்திலேயே பாரதம் என்ற பெயர் இருப்பதை சுட்டிக்காட்டி விளக்கம்
*திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என்று ஆளுநர் ரவி ஆசிரியர் தினச் செய்தி .. ஆசிரியர் தின செய்தியில ‘பாரத’ என்று ஆளுநர் குறிப்பிட்டு இருப்பது நாட்டின் பெயர் மாற்றத்தை உறுதிப்படுத்தும் செயல் என்று கருத்து
*நாடு முழுவதும் ஆறு மாநிலங்களில் உள்ள 7 சட்ட சபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…எட்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை.
*“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுக்கலாம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு.
*திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு .. குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக போலீஸ் கொடுத்த உறுதிமொழியை ஏற்று உறவினர்கள் உடலை பெற்றுச் சென்று சொந்த ஊரில் அடக்கம்.
*தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதை திசை திருப்புவதற்காக சனாதனம் பற்றி பேசும் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்… பட்டியலின மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதன தர்மத்தைப் பற்றி பேசுவதாக எடப்பாடி பழனிசாமி புகார்.
*சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரகார சிறையில் இருந்த போது கூடுதல் வசதிகளை பெறுவதற்கு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு … விசாரணைக்கு ஆஜராகததால் சசிகலா, இளவரசி இருவருக்கும் பிடி வாரண்ட் பிறப்பித்தது பெங்களூர் நீதிமன்றம்.
*ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது நல வழக்கு .. தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.
*தேர்வுக் குழு விதிகளை விளக்கி தமிழக அரசு, ஆளுநருக்கு எழுதி உள்ள கடிதத்தில் துணைவேந்தர்களை உடனடியாக நியமிக்குமாறு வலியுறுத்தல்… பல்கலைக் கழக துணை வேந்தர் தேர்வுக் குழுவில் யு.ஜி.சி. உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் விளக்கம்.
*கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் மீதான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யுமாறு காவல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு .. நீதிமன்றங்களில் பிடி வாரண்ட் இல்லாததால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என்று விளக்கம்.
*வீட்டு மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு … இணையத்தின் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்று அறிவிப்பு.
*மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு …. முரசொலி அறக்கட்டளை தொடர்பாக பேசியதற்காக போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரும் எல்.முருகன் மனு தள்ளுபடி.
*இந்திய மொழிகளின் நடுவன் நிறுவன முன்னாள் இயக்குநர் க. ராமசாமிக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது … பரிசுத்தொகை மற்றும் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பு.
*சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசியதால் அமைச்சர் உதயநிதிக்கு எதிர்ப்பு வலுத்ததன் எதிரொலி ..உதயநிதியின் சென்னை கிரின் வேஸ் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வீடுகளுக்கான போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.
*உதயநிதியின் “சனாதன தர்மம்” ஒழிப்புக் கருத்தை “வெறுக்கத்தக்க பேச்சு” என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு 262 பிரபலங்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் … ஓய்வுபெற்ற 14 நீதிபதிகள், 130 முன்னாள் அதிகாரிகள் , 118 முன்னாள் ஆயுதப்படை அதிகாரிகள் கையெழுத்து
*மக்களை திசை திருப்புவதற்காக சனாதனம் பற்றி உதயநிதி பேசுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து .. அனைத்து மதங்களையும் மதிக்கவேண்டும் என்று அறிவுறுத்தல்.
*ஆதித்யா எல் 1 விண்கலம் சுற்றி வரும் பாதையின் உயரம் இரண்டாவது முறையாக அதிகரிப்பு … எட்டாம் தேதி சுற்றுவட்டப் பாதையின் உயரத்தை மேலும் அதிகரிக்க இஸ்ரோ திட்டம்.
*அனைவரின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் பங்கு மகத்தானது .. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.
*இந்தியா கூட்டணிக்கு நியமிக்கபட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் டெல்லியில் 13 ஆம் தேதி .. தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு.
*சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட அனைத்து மசோதாக்களையும் ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மம்தா பானர்ஜி ஆவேசம் … பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது போன்ற விவகாரங்களிலும் ஆளுநர் தலையிடுவதாக புகார்.
*கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு என்ற வரம்பை மேலும் 15 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என்று சரத்பவார் கருத்து.. மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினர் தனி இட ஒதுக்கீடு கேட்பதை அடுத்து புதிய கோரிக்கை.
*உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு … ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் தேர்வு/
*கடந்த மாதத்தில் கிலோ ரூ.200 வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.10-ஆக சரிந்துள்ள நிலையில், விவசாயிகள் வேதனை…திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி விற்பனையாகாததால் குப்பையில் கொட்டி அழிப்பு.
*வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது .. தமிழ்நாட்டில் எட்டாம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் .
*தெலுங்கான மாநிலத்தில் விடிய விடிய பெய்த கன மழையால் ஐதராபாத் சாலைகள் வெள்ளக் காடானது .. போக்குவரத்து பல மணி நேரம் பாதிப்பு.
*ஜவான் படம் வெளியாக உள்ளதை அடுத்து நடிகர் ஷாருக்கான் திருப்பதியில் தரிசனம் .. ஷாருக்கானுடன் ஜவானில் நடித்து உள்ள நயன்தாராவும் கணவர் விக்னேசுடன் வழிபாடு.