*நாடளுமன்றத் தேர்தலில் பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே முயற்சி…தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவை விட கூடுதலாக இரண்டு தொகுதிகளை தருவதாக வாக்குறுதி தந்ததார் என்று தகவல்.
*டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அன்புமணியை சந்தித்த தாமக தலைவர் ஜிகே வாசன் பாஜக கூட்டணிக்கு வந்துவிடுமாறு அழைப்பு … மக்களவையில் 12 தொகுதிகளும் மாநிலங்களவையில் ஒரு இடமும் பாமக கேட்பதால் இழுபறி.
*பாஜக கூட்டணியில் நான்கு தொகுதிகளை கேட்கிறது தேமுதிக … மாநிலங்களவையில் ஒரு இடம் தருமாறு வலியுறுத்துவதாகவும் தகவல்.
* நிதி பங்கீட்டில் மத்திய அரசின் பாரபட்சமான செயலுக்கு எதிராக கேரள அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்க முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு … தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் பாரபட்சத்தை சுட்டிக்காட்டி அறிக்கை..
*தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தர மறுப்பதாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டிஆர் பாலு வலியுறுத்திய போது மத்திய அமைச்சர் குறுக்கீட்டால் ஆவேசம்…. மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய் எம்பியாக இருக்க தகுதியற்றவர் என்று சொன்ன டிஆர் பாலு நாடாளுமன்றத்தில் பேச கூடாத வார்த்தைகளை பேசவில்லை என்றும் விளக்கம்
*அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் .. பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதை சுட்டிக்காட்டி சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி உத்தரவு..
*திண்டுக்கல் டாக்டரை மிரட்டி லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கிட் திவாரி ஜாமீன் மனு திண்டுக்கல் நீதிமன்றத்தி்ல் மீ்ண்டும் நிராகரிப்பு… கடந்த டிசம்பர் முதல் தேதி முதல் சிறையில் உள்ளார் திவாரி.
*திருப்பூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போல நடித்து வியாபாரியிடம் ஒரு கோடியே 69 லட்சத்தை பறித்துச் சென்ற ஐந்து பேர் கைது … ஒரு கோடியே பத்து லட்சம் மட்டும் மீட்பு.
*இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு சென்று சட்லெஜ் ஆற்றில மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க கின்னூர் மாவட்ட நிர்வாகம் தீவிரம் … சென்னை அடையாற் கடற்படை தளத்திலிருந்து, சிறப்புப் பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைவு.
*இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னை வந்தனர்… தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உடன் நாளை ஆலோசனை நடத்த ஏற்பாடு.
*சென்னையில் திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் சென்ற பேருந்தில் பலகை திடீரென உடைந்ததால் இளம் பெண் கீழே தொங்கியபடி அலறல் … மற்ற பயணிகள் போட்ட சத்தத்திற்கு பிறகு பேருந்தை ஓட்டுநர் நிறுத்தி பெண் மீட்பு.
*எண்ணூரில் டிசம்பர் மாதம் வாயுக்கசிவு ஏற்படட தனியார் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி 33 கிராமங்களின் மக்கள் கடைகளை அடைத்துப் போராட்டம் …சாலை மறியலில் ஈடுப்பட்டதால் போலீஸ் குவிப்பு.
*டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை… சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி 10 இடங்களில் நடவடிக்கை.
*நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் ….முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்ய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.
*இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு கண்டறியப்பட்டு உள்ள புற்று நோய் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது … சிகிக்சை தொடங்கிவிட்டதாக பிரதமர் ரிஷி சுனக் தகவல்.
*ஜப்பான் நாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற அழகிப் போட்டியில் வெற்றிப் பெற்ற கரோலினா ஷினா என்ற 26 வயது இளம்பெண்ணின் பதக்கம் பறிப்பு … திருமணமான ஒருவருடன் காதல் கொண்டிருக்கும் தகவல் வெளியானதை அடுத்து பட்டம் பறிபோனது
*தமிழ்நாடு பிரிமியர் லீக் என்றழைக்கப்படும் டி.என்.பி.எல். கிரிக்கெட் அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு சென்னையில் நாளை ஏலம் … ஏலப்பட்டியலில் இடம்பெற்று உள்ள 690 வீரர்களில் இருந்து 62 வீரர்களை தேர்வு செய்ய நடவடிக்கை.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447