*விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்,எல்.ஏ. புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
*விழுப்புரம் அடுத்து உள்ள அத்தியூர் திருவாதியை கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி… கடந்த 1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980 – 86ல் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். 1996ல் ஒன்றிய சேர்மனாக தேர்வான புகழேந்தி, 2019ல் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார். கடந்த தேர்தலி்ல் வெற்றிப் பெற்றவர் இரண்டரை ஆண்டுகளில் காலமானார்.
*விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின்…. ஈடு செய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவு.
*ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்…. பறிமுதல் செய்யப்பட்ட தங்கநகைகளை ஓசூர் சார் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான செல்வி பிரியங்கா மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
*கடலூரில் மஞ்சக்குப்பத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு மு.க. ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு .. சிதம்பரத்தில் மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து பரப்புரை.
*பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் முக ஸ்டாலின் அதிர்ச்சிக்கு ஆளானதாக திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு …மக்கள் நலன் முக்கியம் என்பதால் பாஜக அணியில் சேரவில்லை என்றும் விளக்கம்.
*காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து காங்கிரசின் தேர்தல் பிரச்சாரம் அமையும் என்று மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் பேட்டி .. மத்தியில் இந்தியா கூடடணி ஆட்சி அமைந்தால் திமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதி.
*பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை இரவு மதுரை வருகிறார் ..விருது நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து திருமங்களத்தில் பொதுக்கூட்டத்தில் பேச முடிவு.
*சென்னையில் திருவான்மியூரில் அரசு ஒப்பந்தத் தாரர் ராமச்சந்தின்,அபிராமபுரத்தில் ஓய்வு பெறற் செயற்பொறியாளர் தங்கவேலு ஆகியோர் வீடுளில் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை .. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நடவடிக்கை..
*திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்,சுங்கச் சாவடிகள் அகற்றப்படும், ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு நீக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் மதிமுக வாக்குறுதி .. சமையல் எரிவாயு சிலிண்டர்.பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும் என்பதும் மற்ற முக்கிய அம்சங்கள்.
*அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு… சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி .19, முதல் மார்ச் 8, வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதாக சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதாக தகவல்.
*போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசரியர்களுக்கு சம்பளம் பிடிக்கவில்லை, வேலை நிறுத்த நாள் விடுமுறை எடுத்துக் கொண்ட நாளாகத்தான் கணக்கிடப்பட்டு உள்ளது …. கல்வி்த் துறை விளக்கம்.
*மயிலாடுதுறை நகரத்தை ஒட்டிய ஆரோக்கிய புரத்தில் நடமாடும் சிறுத்தை மேலும் ஒரு ஆட்டை அடித்துக் கொன்றது… நான்கு நாட்களாக அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்.
*கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் ஸ்டேட் வங்கி ஏடிஎம்ஐ உடைத்து ரூ10 லட்சம் கொள்ளை … சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை பிடிக்க காவல் துறை நடவடிக்கை.
*காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம் லீக் கட்சியின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்தது போன்று உள்ளது .. உபியில் சகரன்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்.
*பெங்களூரு தெற்குத் தொகுதி பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 31 மடங்கு உயர்வு .. விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் வலியுறுத்தல.
*சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும் சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது…. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.87-க்கு விற்பனையாகி வருகிறது.
*தமிழ்நாட்டில் மேலும் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் தகவல் .. பகல் பொழுதில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸை தொடக்கூடுமாம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447