தலைப்புச் செய்திகள் (06-10-2023)

*திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் 2- வது நாளாக வருமான வரிச் சோதனை .. 50 இடங்களில் நடத்தப்படும் சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஆதாரங்களை திரட்டுவதில் அதிகாரிகள் தீவிரம்.

*சென்னை அருகே உள்ள சவீதா மருத்துவக் கல்லூரிக் குழுமத்திற்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரிச் சோதனை தொடர்ந்தது .. 40 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.

*செயின்ட் கோபின் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு சூழல் நன்றாக இருப்பதுதான காரணம் .. சென்னையில் செயின்ட் கோபின் நிறுவன அதிகாரிகள் உடன் நடந்த கலந்துரையாடலின் போது முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

*நடப்பு 2023-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி என்ற பெண்மணிக்கு அறிவிப்பு … ஓராண்டாக சிறையில உள்ள நர்கீஸ், பெண் அடக்குமுறைக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காக போராடியதற்காகவும் விருதுக்கு தேர்வு.

*வங்கிகளுக்கு கொடுக்கப்படும் ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி 6.5 சதவிகிதமாகவே நீடிக்கும் … ரிசர்வ வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு.

*ரெப்போ வட்டியில் மாற்றமில்லாததால் வங்கிகளால் பொதுமக்களுக்கு தரப்படும் வீடு, வாகனம் போன்ற கடனுக்கான வட்டியிலும் மாற்றமிருக்காது.. பண்டிகைக் காலங்களில் மக்களின் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு.

*திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து ஆளுநர் ரவி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் துரை முருகன் கண்டனம் … நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பட்டியலினத்தவர் அல்ல என்றும் விளக்கம்.

*ஆளுநர் ரவி அரசியல் பேச விரும்பினால் பதவியை ராஜினாமா செய்துவி்ட்டு வந்து பேசட்டும் .. சிறப்பாக செயல்படும் தமிழக அரசை விமர்சிப்பது நல்லது அல்ல என்றும் துரைமுருகன் கருத்து.

*சென்னையில் மீண்டும் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை ஆசிரியர்களை தந்திரமாக அப்புறப்படுத்தயது போலீ்ஸ் .. ஆசிரியர்கள், பேருந்தில் செங்கற்பட்டு கொண்டு செல்லப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு .

*கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும் வரை சொத்து வரி உயர்வு இருக்காது என்ற வாக்குறுதியை மீறிவிட்டது திமுக அரசு .. ஆனால் தாமதமாக வரி செலுத்தினால் அபராதம் விதிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி புகார்.

*திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலியின் முக நூல் பக்கம் ஹேக்கர்களால் முடக்கம் .. சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார்.

*நாடளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து ஐ.ஜே.கே. கட்சி போட்டியிடும் என்று எஸ்.ஆர்.பச்சைமுத்து அறிவிப்பு .. கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளை கேட்க உள்ளதகாவும் பேட்டி.

*அக்டோபர் 28- ஆம் தேதி நள்ளிரவில் தோன்ற உள்ள சந்திரகிரகணத்தின் போது நிலவின் 12 சதவிகித பரப்பில் மட்மே இருள் படர்ந்திருக்கும் .. தொலை நோக்கிக் கருவிகள் வழியே பார்த்தாலும் கூட தெரியாமல் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து.

*நெல்லை மாவட்ம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களின் பல்லை பிடுங்கிய வழக்கில் குற்றப்பத்திரிகையை தாயர் செய்தது சி.பி.சி.ஐ.டி … அரசின் அனுமதி கிடைத்த உடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட முடிவு.

*ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து பாஜகவின் எக்ஸ் வலைதளத்தில் பதிவு போடப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்.. நாட்டை ஆள்கின்ற கட்சியின் தரம் தாழ்ந்த விமர்சனம் என்று புகார்.

*சிக்கிம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிகை 21 ஆக அதிகரிப்பு … டீஸ்டா ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் அதிமானவர்களை தேடும் பணி தீவிரம்.

*சிரியா நாட்டில் ராணுவ பயிற்சிக் கூடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை நூறை தாண்டியது …தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் புகார்.

*ஒரிசா பாலு என அறியப்படும் தமிழ் ஆய்வாளரும், எழுத்தாளருமான சிவ பாலசுப்பிரமணி(60) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர்.

*ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட், நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்…. 287 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *